Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"விடைபெறுகிறேன்".. வாய்ப்பே கொடுக்காத பிசிசிஐ.. ஓய்வை அறிவித்த 40 வயது வீரர் விரித்திமான் சாஹா

கொல்கத்தா: இந்திய அணியின் விக்கெட் கீப்பராக 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள விரித்திமான் சாஹா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிப்ரவரி 1 (சனிக்கிழமை) அன்று அவர் தனது கடைசி ரஞ்சி டிராபி போட்டியில் ஆடினார்.

பெங்கால் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆடினார். இந்த தொடருக்கு முன்னதாகவே அவர் தனது ஓய்வு முடிவை வெளியிட்டு இருந்தார். அதன் படி பெங்கால் அணியில் இடம் பெற்று தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆடிய அவர் 28 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வுக்கு விடை கொடுத்தார்.

Wrdidhiman Saha announced retirement from all forms of cricket after Bengal vs Punjab match

விரித்திமான் சாஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 56 இன்னிங்ஸ்களில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 3 சதம் மற்றும் 6 அரை சதங்களை அடித்து இருக்கிறார். விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் 92 கேட்சுகளையும், 12 ஸ்டம்பிங்-குகளையும் செய்து இருக்கிறார்.

ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக வந்த பின் நீண்ட காலமாக சாஹாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். தற்போது 40 வயதான நிலையில் ஓய்வை அறிவித்து விடை பெற்று இருக்கிறார்.

1997 ஆம் ஆண்டில் விரித்திமான் சாஹா கிரிக்கெட் விளையாட துவங்கியதாக தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருக்கும் சாஹா அப்போது இருந்து சுமார் 28 ஆண்டுகள் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டதாக கூறி இருக்கிறார். தனது பெற்றோர் மற்றும் சகோதரர் அனிர்பன் தனக்காக நிறைய தியாகங்களை செய்தார்கள் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தனது மனைவி ரோமி, மகள் அன்வி, மகன் அன்வய் ஆகியோருக்கு நன்றிகளை கூறி இருக்கிறார். மேலும், இந்திய அணி, பெங்கால் கிரிக்கெட் அணி மற்றும் திரிபுரா கிரிக்கெட் அணி ஆகிய மூன்று அணிகளுக்கும், அதன் கிரிக்கெட் அமைப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார் விரித்திமான் சாஹா.

ஐபிஎல் தொடரில் ஐந்து அணிகளில் விரித்திமான் சாஹா இடம் பெற்று ஆடி இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என தான் இடம் பெற்று இருந்த ஐந்து அணிகளுக்கும் நன்றிகளை கூறி இருக்கிறார்.

தனது பயிற்சியாளர்கள், நண்பர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்று இருக்கிறார் விரித்திமான் சாஹா.

Story first published: Saturday, February 1, 2025, 19:41 [IST]
Other articles published on Feb 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+