Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மல்யுத்த வீராங்கனையுடன் சஹால் செய்த சேட்டை.. கிருட்டு கிருட்டுனு சுத்திட்டாங்க.. பாவம் தனாஸ்ரீ!

மும்பை : மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுஸ்வேந்திர சஹாலை தோளில் தூக்கி சுற்றிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சஹால். இதுவரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Wrestler Sangeeta Phogat lifts Yuzvendra Chahal and spins him around video is trending on Social media

பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து சஹால் நீக்கப்பட்டாலும், ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக சஹால் இருந்து வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் செஸ் விளையாட்டிலும் தேசிய அளவில் சஹால் முக்கியமானவர். இவர் சில ஆண்டுகளுக்கு பின் மருத்துவரான தனாஸ்ரீயை திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வந்தன. இதனால் தனாஸ்ரீயை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

மருத்துவரான தனாஸ்ரீ முழு நேர மாடலாகவும் மாறினார். அதுமட்டுமல்லாமல் சில கான்சர்ட்டுகளில் பங்கேற்று நடனம் மற்றும் பாடகியாகவும் மாறினார். தனாஸ்ரீ-யின் வளர்ச்சி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பாலிவுட்டின் பல டான்ஸ் நிகழ்ச்சியில் தனாஸ்ரீ பங்கேற்பாளராக கலந்துகொண்டார். இந்த நிலையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நடன அமைப்பாளருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனாஸ்ரீ பகிர்ந்து கொண்டார். இது ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்றது.

இதனால் விரைவில் சஹாலை தனாஸ்ரீ விவாகரத்து செய்ய உள்ளதாக ரசிகர்கள் சில கருத்து பதிவிட தொடங்கினர். இந்த நிலையில் சஹால் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் உடன் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சஹாலை தனது தோளில் தூக்கிய சங்கீதா போகத், அவரை கிருட்டு கிருட்டு என சுற்றினார். தனாஸ்ரீயின் நண்பரான சங்கீதா போகத், சஹாலுடன் விளையாடியது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Sunday, March 3, 2024, 15:08 [IST]
Other articles published on Mar 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+