என்ன நடக்குது இந்திய கிரிக்கெட்டில் ? சாஹாவை மிரட்டிய பத்திரிகையாளர்.. அவமானப்படுத்திய சேத்தன் சர்மா
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இது போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். வீரர்களை ஒரு காலத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் அவ்வளவு மரியாதையாக நடத்துவார்கள்.
ஆனால், இப்போது உள்ள நிர்வாகிகள், வீரர்களுக்கு உரிய மரியாதையும் தருவதில்லை, அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் தரவில்லை.
இந்தியாவுக்கு கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று தந்த விராட் கோலியையே, அரைமணி நேரத்திற்கு முன்பு தான் கேப்டன் பதவியை விட்டு நீக்கப்பட்டுள்ளீர்கள் என்று பிசிசிஐ கூறியிருந்தது.

விதிர்மான் சாஹா
தற்போது, அதே போல் ஒரு நிலைமையை விரித்திமான் சாஹா சந்தித்துள்ளார். 38 வயதை நெருங்கும் சாஹா, இதுவரை 40 டெஸ்டில் விளையாடி 1353 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும். இந்தியாவின் நம்பர் 1 விக்கெட் கீப்பர் என்று பெயர் எடுத்தவர் சாஹா. ஆனால் தென்னாப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு சாஹா தாயகம் திரும்பியுள்ளார்.

பரிசீலிக்க மாட்டோம்
அப்போது தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா சொஹாவை தொடர்பு கொண்ட இனி, இந்திய அணிக்கு உங்களை தேர்வு செய்ய பரிசீலிக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்று பயிற்சியாளர் டிராவிட்டும், இனி இளைஞர்களை அணியில் எடுக்க உள்ளதால், ஓய்வு பெறுவதை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் மிரட்டல்
பிசிசிஐ நிர்வாகிகள் சாஹாவிடம் ஓய்வு பற்றி பேசியது பத்திரிகையாளர் போரியாவுக்கு எப்படியோ தெரிந்துள்ளது. இதனால் போரியா, சாஹாவை பேட்டி வழங்குமாறு கூறியுள்ளார். இதற்கு சாஹா பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த போரியா, அவரை மிரட்ட தொடங்கியுள்ளார்.

சாஹா அதிர்ச்சி
தமக்கு பதில் அளிக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் போரியா மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாஹா, தம்மை போரியா மிரட்டுவதாகவும், இந்தியாவுக்காக விளையாடிய எனக்கு இது தான் நிலைமை என்று கூறி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications