For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட சின்னத்தம்பி.. மீண்டும் அணிக்கு திரும்பும் பழைய விக்கெட் கீப்பர்!

Recommended Video

I can be India's No. 4: Suresh Raina | கோலி செய்யும் தவறை புட்டு புட்டு வைத்த ரெய்னா!

மும்பை : இந்திய அணியில் இருந்து மொத்தமாக ரிஷப் பண்ட்டை நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற உள்ளார் விரிதிமான் சாஹா.

தோனிக்கு பின், டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்றவர் தான் விரிதிமான் சாஹா. இடையே காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார்.

அந்த இடைவெளியில் அணிக்குள் நுழைந்து சாதித்த ரிஷப் பண்ட் அவரது இடத்தை தட்டிப் பறித்தார். தற்போது மீண்டும் சாஹாவுக்கு வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.

டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர்

டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர்

தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இடம் பிடித்தார் விரிதிமான் சாஹா. மேற்கு வங்கத்தை சேர்ந்த சாஹா, டெஸ்ட் அணியில் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், நல்ல விக்கெட் கீப்பராக இருந்தார்.

காயம்

காயம்

அவருக்கு ஜனவரி 2018இல் தோள்பட்டையில் ஏற்பட்ட உள் காயத்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின் அவரால் ஓராண்டுக்கும் மேலாக அணிக்கு திரும்ப முடியவில்லை.

தினேஷ் கார்த்திக் நீக்கம்

தினேஷ் கார்த்திக் நீக்கம்

அந்த இடைப்பட்ட காலத்தில் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தினேஷ் கார்த்திக் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. அடை அடுத்து அவர் நீக்கப்பட்டார்.

அசத்தல் அறிமுகம்

அசத்தல் அறிமுகம்

அப்போது அணிக்கு வந்தவர் தான் இளம் வீரர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து தொடரில் பாதியில் வந்து அணியில் இணைந்தார். தன் முதல் தொடரிலேயே சதம் அடித்து எல்லோரையும் வியக்க வைத்தார்.

ரிஷப் பண்ட் சாதனை செய்தார்

ரிஷப் பண்ட் சாதனை செய்தார்

இங்கிலாந்து தொடரில் சதம் அடித்த அவர் அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சதம் அடித்தார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்தார் பண்ட்.

பண்ட் பார்ம் அவுட்

பண்ட் பார்ம் அவுட்

டெஸ்ட் அணியில் அவரது ஆதிக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ஒருநாள் அணியிலும், டி20 அணியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் பண்ட் பெரிதாக சாதிக்கவில்லை. பல வாய்ப்புகள் கிடைத்தாலும் ரன் குவிக்கவில்லை.

டெஸ்ட் வாய்ப்பும் போகிறது

டெஸ்ட் வாய்ப்பும் போகிறது

ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்டை நீக்கப் போகிறார்கள் என்ற பேச்சு இருந்த நிலையில், டெஸ்ட் அணியிலும் அவருக்கு இனி வாய்ப்பு கொடுக்காமல் நீக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

அணி நிர்வாகம் விவாதம்

அணி நிர்வாகம் விவாதம்

தேர்வுக் குழு அவருக்கு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஒரு டெஸ்ட் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்றும், கோலி, ரவி சாஸ்திரி பண்ட்டுக்கு ஒரு டெஸ்ட் கூட கொடுக்க வேண்டாம். சாஹாவை அணியில் சேர்க்கலாம் என்றும் விவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

சாஹா அனுபவம்

சாஹா அனுபவம்

ஆக மொத்தத்தில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சாஹா இந்திய அணியில் இடம் பிடித்து விடுவார் என்றே கருதப்படுகிறது. இது வரை சாஹா 32 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 3 சதம், 5 அரைசதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 30 ஆகும்.

நல்ல பார்மில் இருக்கிறார்

நல்ல பார்மில் இருக்கிறார்

மேலும், சமீப காலமாக நல்ல பார்மில் இருக்கிறார் சாஹா. தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 60 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக 62 ரன்களும் அடித்து இருக்கிறார். இந்திய அணி தன் பழைய விக்கெட் கீப்பருக்கே மீண்டும் வாய்ப்பு தரப் போகிறது.

Story first published: Friday, September 27, 2019, 18:58 [IST]
Other articles published on Sep 27, 2019
English summary
Wriddhiman Saha to get chance in South Africa test series says reports. Rishabh Pant may be expelled from the test team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X