Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: தென்னாப்பிரிக்கா செய்த தவறு.. ஆஸ்திரேலியா 150 ரன் கூட எடுத்திருக்காது.. ரிவ்யூ சொதப்பல்

லண்டன்: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிவரும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணமே, ஆஸ்திரேலிய வீரர் பியூ வெப்ஸ்டருக்கு எல்.பி.டபிள்யூ முறையில் ரிவ்யூ செய்யாததுதான் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பியூ வெப்ஸ்டர் 8 ரன்கள் எடுத்த நிலையிலேயே ஆட்டமிழந்திருப்பார். ஆனால், அப்போது ரிவ்யூ செய்யாத காரணத்தால் அவர் 72 ரன்கள் எடுத்தார். அதனால்தான் ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு, முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 43 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

WTC 2023-25 Final Australia South Africa WTC Final South Africa Review Blunder

இது பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியை 150 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்க அணி சுருட்டியிருக்கலாம். ஆனால், பியூ வெப்ஸ்டரை 72 ரன்கள் வரை அடிக்கவிட்டு தென்னாப்பிரிக்க அணி சொதப்பி இருக்கிறது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 20 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஷேன் 56 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேமரூன் கிரீன் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு, ஸ்டீவ் ஸ்மித் பொறுமையாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆறாம் வரிசையில் இறங்கிய பியூ வெப்ஸ்டர் சிறப்பாக விளையாடினார். ஆனால், அவர் எட்டு ரன்கள் எடுத்த நிலையில், காகிசோ ரபாடாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது. அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அப்போது தென்னாப்பிரிக்கா வீரர்கள் ரிவ்யூ செய்ய வேண்டாம் என முடிவெடுத்தனர். அதுதான் பெரிய தவறாக மாறிவிட்டது. பந்து பேட்டில் பட்டிருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால், பந்து பேட்டில் படவில்லை.

அதன் பிறகு, ரீப்ளேயில் பார்த்தபோது அது எல்.பி.டபிள்யூ அவுட் ஆகி இருக்கும் என தெரிந்தது. ஆனால், தென்னாப்பிரிக்க அணி ரிவ்யூ செய்யாததால் இந்த அரிய வாய்ப்பு வீணானது. இந்த வாய்ப்பை வீணடித்த தென்னாப்பிரிக்க அணி, அதன் பிறகு பியூ வெப்ஸ்டருக்கு இரண்டு முறை தவறான ரிவ்யூக்களை கேட்டு, இரண்டு ரிவ்யூவையும் வீணடித்தது.

பியூ வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கேரி 23 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 56.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்க அணி அபாரமாக ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டிங்கில் சொதப்பியது.

தென்னாப்பிரிக்க அணியின் முதல் ஓவரின் முடிவிலேயே எய்டன் மார்க்ரம் ஆறு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன. முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 22 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி.

Story first published: Thursday, June 12, 2025, 7:39 [IST]
Other articles published on Jun 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+