Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் - இந்தியா எந்த இடம்? இங்கிலாந்து அணியால் இந்தியாவுக்கு சிக்கலா?

லண்டன்: 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த அணியின் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம் இலங்கை அணி ஆறாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு சரிந்து உள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த புள்ளிப் பட்டியலில் இந்தியா தனது முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தியா 68.5 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.

world test championship india england

ஆஸ்திரேலியா 62.5 வெற்றி சதவீதம் பெற்று இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து 50 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து அணி தற்போது 45 சதவீத வெற்றியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஏழு போட்டிகள் மீதம் உள்ளன. அந்த ஏழு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் 62.5 வெற்றி சதவீதத்தை எட்ட முடியும்.

அப்போது கூட தற்போது இந்தியா வைத்து இருக்கும் வெற்றி சதவீத அளவுக்கு இங்கிலாந்து அணியால் முன்னேற முடியாது. இந்திய அணிக்கு இன்னும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பத்து போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதில் குறைந்தது ஆறு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

இந்த புள்ளிப் பட்டியலில் மற்றொரு சுவாரசியமும் உள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடம் பெற்றுள்ள ஒன்பது அணிகளில் இந்தியா மட்டுமே மிகக் குறைந்த அளவிலான தோல்விகளை சந்தித்து இருக்கிறது. மற்ற அணிகள் எல்லாம் குறைந்த பட்சம் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளன. ஆனால், இந்தியா இரண்டு தோல்விகள் மற்றும் ஒரு டிரா மட்டுமே சந்தித்து உள்ளது.

எனினும், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒவ்வொரு அணியும் வெவ்வேறு எண்ணிக்கைகளில் போட்டிகளில் பங்கேற்பதால் வெற்றி சதவீதம் தான் முக்கியம் ஆகும். அதன் அடிப்படையில் தான் அணிகள் பட்டியலிடப்படும். தற்போது இங்கிலாந்து அணி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், அந்த அணியால் அடுத்து உள்ள போட்டிகளில் வெற்றி பெற்று அதிகபட்சமாக 62.5 சதவீத வெற்றியை அடைய முடியும்.

ஏனெனில், இங்கிலாந்து அணி அதிக போட்டிகளில் விளையாடுகிறது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 22 போட்டிகளில் பங்கேற்கிறது. அதே சமயம் இந்தியா 19 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 17 போட்டிகளிலும் மட்டுமே விளையாட உள்ளன. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் வெறும் பத்து போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளன. இந்த வித்தியாசத்தால் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறது என்பதை வெற்றி, தோல்விகளை வைத்து மட்டும் சொல்லி விட முடியாது. ஒட்டுமொத்தமாக ஆடும் போட்டிகளில் மொத்தம் எத்தனை சதவீத வெற்றிகள் என்ற கணக்கின் அடிப்படையில் தான் புள்ளிப் பட்டியல் வரிசைப்படுத்தப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 2, 2024, 7:02 [IST]
Other articles published on Sep 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+