Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC 2025-27: பைனலுக்கு தகுதி பெற இந்திய அணி இன்னும் எத்தனை போட்டிகளில் வெல்ல வேண்டும்?

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025- 27 சைக்கிளில் இந்தியா தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை தக்க வைத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் எதிராக சொந்த மண்ணில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 124 ரன்கள் என்ற இலக்கை தொட முடியாமல், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 54.17 வெற்றி சதவீதத்துடன் இந்தியா நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

India cricket tea

இந்தியா நான்கு வெற்றி, மூன்று தோல்வி ஒரு டிரா கண்டிருக்கிறது. கடந்த தொடரில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அன்னிய மண்ணிலும் தோல்வியை தழுவியதால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாமல் போனது. இந்த நிலையில் 2027 இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

2025- 27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்தியா மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் எட்டு போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்னும் 10 போட்டிகள் மட்டுமே உள்ளது. இந்த 18 போட்டிகளில் மற்ற அணிகளின் தயவு இல்லாமல் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 11 போட்டிகள் ஆவது இந்தியா வெற்றி பெற வேண்டும்.

தற்போது ஏற்கனவே நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால் இந்திய அணி குறைந்தபட்சம் ஏழு போட்டியில் ஏதாவது இனி வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் 6 போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் டிராவாவது பெறவேண்டும். இவ்வாறு அடுத்த பத்து போட்டிகளில் முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தால் நிச்சயம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.

அப்படி இந்தியா 11 வெற்றி, ஒரு ட்ராவை கண்டிருந்தால் 136 புள்ளிகளை இந்தியா பெற்று இருக்கும். இதன் மூலம் 62.96 வெற்றி சதவீதத்தை இந்தியா அடைந்திருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் 60 புள்ளிகளுக்கு மேல் எடுத்திருந்தாலே இறுதிவாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி தான்.

தற்போது இந்தியாவுக்கு வரும் நவம்பர் 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 2026 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளையும், நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதன் பிறகு 2027 பிப்ரவரி மார்ச் மாதம் இந்திய அணி தங்களுக்கு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஐந்து டெஸ்ட்களில் எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடர்களில் மொத்தமாக இந்தியா 7 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 18, 2025, 23:18 [IST]
Other articles published on Nov 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+