Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் - இந்தியா முன்னேற்றம் ஆனால் ஒரு சிக்கல்.. ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் முன்னேறி இருக்கிறது. ஆனாலும், இந்திய அணியால் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற முடியவில்லை.

தற்போது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், இலங்கை - வங்கதேசம் டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

World Test Championship IND vs ENG Test Cricket Australia India
  • இதில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 24 புள்ளிகளுடன் 100% வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
  • வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் இலங்கை அணி, அதில் ஒரு வெற்றியும் ஒரு டிராவும் செய்து இருக்கிறது. மொத்தம் 16 புள்ளிகளுடன் 66.67% வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி, அதில் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. அதனால் இரு அணிகளும் சரிசமமாக 12 புள்ளிகளுடனும் 50% வெற்றியுடனும் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.
  • வங்கதேச அணி இரண்டு போட்டிகளில் ஒரு டிரா மட்டும் செய்து, 4 புள்ளிகளுடனும் 16.67% வெற்றி சதவீதத்துடனும் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • வெஸ்ட் இண்டீஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து ஆறாவது இடத்தில் உள்ளது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சற்று பின்தங்கியே உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா 100% வெற்றியுடன் இருப்பதால், இந்த புள்ளிப்பட்டியலில் இந்திய அணியால் முதலிடத்தை அத்தனை எளிதில் எட்ட முடியாது.

ஆஸ்திரேலிய அணி அடுத்து விளையாட உள்ள தொடர்களில் சில தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே அந்த அணியின் வெற்றி சதவீதம் குறையும். அப்போதுதான் இந்தியா உட்பட மற்ற அணிகள் முதலிடத்தை நோக்கிச் செல்ல முடியும்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி 66.67% வெற்றி சதவீதத்துடன் உள்ளது. அந்த அணியை முந்த வேண்டும் என்றால், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இன்னும் வெற்றி பெற வேண்டும்.

Story first published: Monday, July 7, 2025, 9:54 [IST]
Other articles published on Jul 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+