Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC 2025-27: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடம்.. இந்தியாவுக்கு எந்த இடம்

டிரின்டாட்: மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தரவரிசையில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தான் அணியின் தொடர்ச்சியான எட்டாவது டெஸ்ட் தோல்வியாகும். இதனால் விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன், வெறும் 6.66 புள்ளி சதவீதத்தை மட்டுமே பெற்று அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

இந்த வெற்றியைப் பெற்ற போதிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 11 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் தரவரிசையில் எட்டாவது இடத்திலேயே நீடிக்கிறது. இந்திய அணி ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகள், நான்கு தோல்விகள் மற்றும் ஒரு டிராவைப் பெற்று தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.

WTC 2025-27

இப்போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி,முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பதிலுக்கு விளையாடிய பாகிஸ்தான் அணி, 282 ரன்களுக்கு சுருண்டது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு கட்டத்தில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆனால் கீமர் ரோச் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக அந்த அணி மீண்டெழுந்து, பாகிஸ்தானுக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஸ்ரேயாஸ் ஐயர் 3 வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக வருவார்.. 10 ஆண்டு முன்பு கணிப்பு.. EX வீரர் கருத்து

ஸ்ரேயாஸ் ஐயர் 3 வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக வருவார்.. 10 ஆண்டு முன்பு கணிப்பு.. EX வீரர் கருத்து

சவாலான இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை அழுத்தத்தை தாங்க முடியாமல் சரிந்து, வெறும் 120 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாபர் அசாம் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை போராடினார்,

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில், ஆஸ்திரேலிய அணி 8 போட்டிகளில் 7 வெற்றிகள், 1 தோல்வி என 87.50 புள்ளி சதவீதத்துடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி 75.00 புள்ளி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 72.22 புள்ளி சதவீதத்துடன்மூன்றாவது இடத்திலும், 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் பங்களாதேஷ் அணி 58.33 புள்ளி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

IND vs SL: முதல் டெஸ்ட் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? அஸ்வின் கணிப்பு

IND vs SL: முதல் டெஸ்ட் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? அஸ்வின் கணிப்பு

இந்திய அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 1 டிராவுடன் 48.15 புள்ளி சதவீதத்தை பெற்று ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 41.67 புள்ளி சதவீதத்தைப் பெற்று ஆறாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 13 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 24.36 புள்ளி சதவீதத்தைப் பெற்று ஏழாவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணி 11 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 22.73 புள்ளி சதவீதத்தைப் பெற்று எட்டாவது இடத்தில் தொடர, பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் 6.66 புள்ளி சதவீதத்தைப் பெற்று கடைசி இடமான ஒன்பதாவது இடத்தில் முடங்கியுள்ளது.

Story first published: Wednesday, July 29, 2026, 11:56 [IST]
Other articles published on Jul 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+