Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. பாதாளத்திற்கு சென்ற பாகிஸ்தான்.. இங்கிலாந்து கிடுகிடுவென உயர்வு

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 194 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் 389 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 50.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகீல் பொறுப்புடன் விளையாடி அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்த போதிலும், மற்ற வீரர்களின் சொற்ப ரன்களால் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

WTC 2025-27

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆலி ராபின்சன் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்குப் பக்கபலமாக இருந்த ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 15 ஓவர்களில் 73 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தத் தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் WTC 2025-27 புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி தனது மொத்த புள்ளிகளை 62 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அவர்களின் புள்ளி சதவீதம் 29.76 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், அவர்கள் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 7-வது இடத்திலேயே நீடிக்கின்றனர்.

அதே நேரத்தில், இந்த மோசமான தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணி 19.05 புள்ளி சதவீதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 80 புள்ளி வெற்றி சதவீதத்துடன் முதலிடம், 75 வெற்றி சதவீதத்துடன் தென்னாப்பிரிக்கா 2வது இடம், நியூசிலாந்து 72.22 வெற்றி சதவீதத்துடன் 3வது இடத்திலும், வங்கதேசம் 55 புள்ளி 56 வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்திலும், 51.52 சதவீதத்துடன் இந்தியா 5வது இடத்திலும் உள்ளது.

Story first published: Sunday, August 30, 2026, 23:45 [IST]
Other articles published on Aug 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+