Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பையும் கோட்டை விட்ட இந்தியா? இன்னும் எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்?

புனே: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய அணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக விளையாடி வரும் நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி பின் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி எந்த இடத்தில் இருக்கிறது? நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா தோற்றால், அடுத்து எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்? இந்தியாவின் வாய்ப்பை பறிக்கக் கூடிய வாய்ப்பு உள்ள அணிகள் எவை? என்பது பற்றி பார்க்கலாம்.

ind vs nz india new zealand

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 68.06 வெற்றி சதவீதம் வைத்து இருந்தது. அந்த தோல்விக்கு பின்னும் இந்திய அணியே புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 62.5 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி 55.68 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 47.62 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

இந்த நான்கு அணிகளுக்கு இடையே தான் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டி உள்ளது/ 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெற வேண்டும். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 350 அல்லது 400 ரன்களுக்கும் மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதை எட்டுவது மிகவும் கடினம் என்பதால் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 62.82 ஆக சரியும்.

அதன் பின் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் ஆகிய ஆறு போட்டிகளில் விளையாட வேண்டும். அந்த ஆறில் நான்கு வெற்றிகளை பெற்றால் மட்டுமே இந்திய அணியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற முடியும்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி இதுவரை ஒரே டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வென்றாலும் அதன் பின் ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும்.

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி மூன்று தோல்விகளை சந்தித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும். அதன் பின் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ள டெஸ்ட் தொடர்கள் முக்கியமான தொடர்களாக இருக்கும். அந்த தொடர்களில் அதிக வெற்றிகளை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, October 25, 2024, 19:47 [IST]
Other articles published on Oct 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+