பாகிஸ்தானுக்கு மேலும் சோகம்..மெதுவாக ஓவர்கள் வீசியதால் புள்ளிகள் குறைப்பு.. WTC பட்டியலில் 8வது இடம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணிக்கு எட்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. மிர்பூரில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்டில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட எட்டு ஓவர்கள் குறைவாக வீசியதற்காக இந்த புள்ளிக் குறைப்பு மற்றும் போட்டி ஊதியத்தில் 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி வெறும் 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.
வங்கதேசம் பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வெற்றி பெற்றது. இப்போட்டியில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ, மோமினுல் ஹக் ஆகியோர் வங்கதேசத்தின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர். ஷேர்-இ-பங்ளா மைதானத்தில் பங்களா டைகர்ஸ் அணிக்கு இது ஒரு மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது.

வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் குவித்தது. இதில் ஷான்டோ சதம் விளாச, ஹக் 91 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்தது. அங்கு அஸான் அவாய்ஸ் 103 ரன்களும், அப்துல்லா ஃபஸல் 60 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இரண்டாம் இன்னிங்ஸில் ஷான்டோ 87 ரன்களும், ஹக் 56 ரன்களும் எடுக்க, வங்கதேசம் 240/9 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வங்கதேச வீரர் நஹித் ரானா, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தான் அணியை சுருட்டி, வங்கதேச அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இதனையடுத்து தொடரை தீர்மானிக்க கூடிய 2வது டெஸ்ட் அபோட்டி நாளை தொடங்குகிறது. இதில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications