Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final 2021: 'பிளேயிங் கண்டிஷன்ஸ்' புரியாமல்.. குழம்பும் பிசிசிஐ - ஐசிசி மவுனம் ஏன்?

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 'விளையாட்டு விதிமுறைகள்' குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என பிசிசிஐ காத்திருக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

குழம்பும் பிசிசிஐ

குழம்பும் பிசிசிஐ

இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயிங் கண்டிஷன்ஸ்களை ஐசிசி இதுவரை வெளியிடாமல் இருந்து வருகிறது. இதனால், இறுதிப் போட்டி ஒருவேளை டிராவில் முடிந்தாலோ, இரண்டாம் இன்னிங்ஸில் டார்கெட் சேஸிங்கில் ஆட்டம் சமனில் முடிந்தாலோ அல்லது போட்டியே நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டாலோ, யார் வெற்றியாளர்? என்பது குறித்த தெளிவு இதுவரை பிசிசிஐ-க்கு கூட இல்லை.

தெளிவான முடிவு

தெளிவான முடிவு

இந்த நிலையில், இப்போட்டிக்கான விதிமுறைகளை ஐசிசி விரைவில் அறிவிக்கும் என்று பிசிசிஐ எதிர்பார்க்கிறது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இதுகுறித்த அறிவிப்பை ஐசிசி விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம். ஆனால், தேதியை உறுதியாக கூற முடியாது' என்றார். அப்படி அறிவிக்கும் பட்சத்தில் போட்டிக்கான தெளிவான முடிவுக்கு வர முடியும்.

சகலமும் ரூல்ஸ் படி

சகலமும் ரூல்ஸ் படி

சரி.. அதென்ன பிளேயிங் கண்டிஷன்ஸ்?.. எந்தவொரு கிரிக்கெட் தொடர் நடைபெற்றாலும், அதன் விதிமுறைகளை ஐசிசி வகுத்து கொடுப்பது தான் பிளேயிங் கண்டிஷன். அதாவது ஒவ்வொரு நாளும் எத்தனை ஓவர்கள் வீச வேண்டும்?, போட்டி தடைப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? போட்டி ரத்தானால் என்ன செய்ய வேண்டும்? ஓவர்கள் பொறுமையாக வீசினால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது தொடங்கி. அம்பயர்கள் பயன்படுத்தும் லைட் ரீடிங் மீட்டர் வரை அனைத்து விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கும். அதன்படி தான் அம்பயர்கள் செயல்பட முடியும்.

ஏன் இத்தனை குழப்பம்

ஏன் இத்தனை குழப்பம்

அதன்படி, இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளை தான் பிசிசிஐ கோருகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால் தான் இத்தனை அவசரம். இதுவொரு வழக்கமான டெஸ்ட் தொடர் கிடையாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். நடப்பதோ முதன்முறை. அதனால் தான் இத்தனை குழப்பம்.

Story first published: Thursday, May 20, 2021, 10:40 [IST]
Other articles published on May 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+