Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்விக்கு காரணமே இது தான்.. ஆஸ்திரேலிய வீரர்கள் மீது மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை இழந்தது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் தவறான செயல்களால் தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்ததாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலிய அணியின் பலமே நான்கு வீரர்கள் அடங்கிய பந்துவீச்சு தான். ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் லயன் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

Mitchell Johnson

இனி எதிர்காலத்தை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசிக்க வேண்டும். கடந்த சில காலமாக உடல் தகுதி பிரச்சனையில் அவதிப்பட்டு வருகின்றார்.அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவர் சென்றது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இதே போல் போட்டியின் மூன்றாவது நாளில் லயனும் பெரிய அளவில் பந்துவீச்சில் சாதிக்கவில்லை. இந்த நான்கு வீரர்களும் ஆசஸ் தொடர் விளையாடிவிட்டு பின் ஓய்வு பெறுவது என்பது சரியான அணுகுமுறை தானா?இனி நம் எதிர்காலத்தை நோக்கி அணியை கட்டமைக்க வேண்டும். ஸ்டார்க், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்காட் போலேன்ட் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோன்று கிரீன் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. மொத்தமாகவே 5 பந்துகளை தான் அவர் எதிர்கொண்டு இருக்கிறார். எனவே நம்பர் மூன்றாவது வீரர்களுக்கான இடத்திற்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.
இதேபோன்று ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் சரிவுக்கு காரணம் மார்னஸ் சரியாக விளையாடாமல் இருப்பது தான். இதே போன்று ஸ்மித் பேட்டிங் வரிசையில் மாறிக்கொண்டே இருந்து வருகிறார். அவரும் சில போட்டிகளில் தடுமாறி வருகிறார் என்று மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 15, 2025, 15:30 [IST]
Other articles published on Jun 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+