Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final 2025: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட் என்ன?

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 ஆம் ஆண்டு சைக்கிளில் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

இந்த நிலையில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்தில் களமிறங்கியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை முதல் முறையாக ஐசிசி உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைக்க முயற்சி செய்து வருகிறது.

South africa vs Australia

இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ரபடா மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரபாடா போதை மருந்துகளை பயன்படுத்தியதை அடுத்து அவர் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இதனால் ஏற்பட்ட அவமானத்தால் மனமுடைந்துள்ள ரபாடா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாதிக்க நினைக்கின்றார். இதேபோன்று மார்க்கோ யான்சன், மகராஜ், லுங்கி நிகிடி போன்ற பவுலர்கள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை கொடுப்பார்கள். எனினும் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் மட்டும்தான் பெரிய அளவு அனுபவம் இல்லாமல் இருக்கின்றது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அவருடைய பந்துவீச்சு அதே பலத்துடன் இருக்கின்றது. பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட், நாதன் லயன் வெப்ஸ்டர் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள். எனினும் பேட்டிங்கில் சில வீரர்கள் ஃபார்மில் இல்லாமல் இருந்தது அந்த அணிக்கு கொஞ்சம் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

லண்டன் லார்ட்ஸ் ஆடுகளம் தற்போது புற்கள் இன்றி காய்ந்த நிலையில் இருக்கின்றது. இதன் காரணமாக சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிகிறது. மேலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்தில் எப்போதுமே புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்ய முடியும். இதன் காரணமாக முதல் சில ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும். போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஆறாவது நாளாக ரிசர்வ் டே பயன்படுத்தப்படும்.

தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: 1 ஏய்டன் மார்க்ரம், 2 ரியான் ரிக்கில்டன், 3 வியான் முல்டர், 4 டெம்பா பவுமா (கேப்டன்), 5 டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 6 டேவிட் பெடிங்காம், 7 கைல் வெர்ரேய்ன், 8 மார்கோ ஜான்சன், 9 கேசவ் மகாராஜ், 10 ககிசோ ரபாடா,

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: 1, உஸ்மான் கவாஜா, 2, மார்னஸ் லாபஸ்சேன், 3 கேமரூன் கிரீன், 4 ஸ்டீவன் ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6, பியூ வெப்ஸ்டர், 7 அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்) 8, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 9 மிட்செல் ஸ்டார்க், 10 நாதன் லியோன், 11 ஜோஷ் ஹேசல்வுட்

Take a Poll
Story first published: Tuesday, June 10, 2025, 20:55 [IST]
Other articles published on Jun 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+