Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Finals 2025: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போட்டியை எந்த சேனல், ஓடிடியில் பார்ப்பது? நேரம் என்ன?

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் நாளை புதன்கிழமை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்திய அணி கடைசி கட்டத்தில் பல தோல்விகளை தழுவியதால் மூன்றாவது முறையாக தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த சூழலில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த கோப்பையை கைப்பற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

WTC Final 2025

இந்த தருணத்தில் டெம்பா பெவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி வரலாற்று சாதனை படைத்து முதல் ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெம்பா பெவுமா, இந்த போட்டி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த கோப்பையை நாங்கள் வென்றால் எங்கள் நாட்டின் கிரிக்கெட்டை முற்றிலும் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனக்கு தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இறுதி போட்டிக்கு கடும் நெருக்கடிகளை சந்தித்து நாங்கள் வந்தோம். ஆனால் தென்னாப்பிரிக்காவின் இறுதிப் போட்டிக்கான பயணம் எளிதாக அமைந்ததற்கு நாம் தென்னாப்பிரிக்க அணியை குறை சொல்லக்கூடாது.

தென்னாபிரிக்க அணியில் பல புது முகவீரர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு எப்போதுமே சிறந்த ஒன்றாக தான் இருக்கும் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 11ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டி அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஆட்டத்தின் முடிவை தெரிந்து கொள்வதற்காக ஜூன் 16ஆம் தேதி ரிசர்வ் டேவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் வீச முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்த ரிசர்வ் டே பயன்படுத்தப்படும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்பில் பார்க்கலாம்.

Story first published: Tuesday, June 10, 2025, 10:26 [IST]
Other articles published on Jun 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+