Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Finals 2025: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் காயம்.. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.. விவரம்

லண்டன்: 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாளில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், கேட்ச் பிடிக்க முயற்சிக்கும்போது காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய கொண்டு செல்லப்பட்டார்.

மூன்றாம் நாளின் இறுதி செஷனில், தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, 2 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஸ்லிப் கார்டனை நோக்கி சென்றது. ஹெல்மெட் அணிந்து நெருக்கமாக நின்றிருந்த ஸ்மித், கேட்ச் எடுக்க முயன்றார். ஆனால், கேட்சை தவறவிட்டதோடு, வலது கையைப் பிடித்தபடி வலியில் துடித்தார்.

Steve Smith

பின்னர் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் காயத்தை உறுதிப்படுத்தியது.ஆஸ்திரேலிய அணியின் மருத்துவக் குழுவினரால் முதலுதவி பெற்ற பிறகு, ஸ்மித் அன்றைய நாள் முழுவதும் மைதானத்திற்கு திரும்பவில்லை. பின்னர் அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய கொண்டு செல்லப்பட்டார்.

36 வயதான ஸ்மித் தனது வலது கை சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டதாக
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில்,
"ஸ்டீவ் ஸ்மித், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஸ்லிப் கார்டனில் பீல்டிங் செய்யும்போது வலது கை சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டது. அவர் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு, எக்ஸ்-ரே மற்றும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்," என்று தெரிவித்தது.

இதற்கிடையில், ஸ்மித் நான்காம் நாளிலோ அல்லது இறுதிப்போட்டியின் மீதமுள்ள நாட்களிலோ மைதானத்திற்கு திரும்புவது சந்தேகமே. இதனால் ஸ்மித் 6 மாதம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் ஆஷஸ் தொடருக்கு திரும்ப அவர் முயற்சி செய்வார். இந்த நிலையில், 282 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்த பிறகு, ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வலுவான நிலையை எதிர்பார்த்தது. ஆனால், ஏய்டன் மார்க்ரம் மற்றும் பவுமா ஆகியோர் தென்னாப்பிரிக்காவை வரலாற்று வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

மார்க்ரமின் ஆட்டமிழக்காத சதம் மற்றும் தொடை தசை காயத்துடன் ஆடிய பவுமாவின் போராட்டமான ஆட்டம் ஆகியவை, மூன்றாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய வெற்றிக்கு, 8 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

Story first published: Saturday, June 14, 2025, 10:40 [IST]
Other articles published on Jun 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+