WTC Final 2025: கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் பலப் பரீட்சை நடத்தியது. கிரிக்கெட்டின் மெக்காஹ் என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்க அணியால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டு 212 ரன்கள் எடுத்தது. மீண்டும் தென்னாப்பிரிக்க அணி தங்களுடைய முதல் இன்னிங்சை பேட்டிங் செய்தபோது 43 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

தற்போது தென்னாப்பிரிக்க அணி 169 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியின் முதல் நாள் ஆட்டத்தில் ஸ்மித் 66 ரன்கள் குவித்து அசத்தினார். விக்கெட்டுகள் விழுந்த போது ஸ்மித் மட்டும் நிலையான இன்னிங்சை ஆடி ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மிட்டார்.
இதன் மூலம் ஒரு மகத்தான சாதனையை ஸ்மித் முறியடித்திருக்கிறார். புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெயரை ஸ்மித் பெற்றிருக்கிறார். ஸ்மித் 591 ரன்கள் குவித்திருக்க, இதற்கு முன்பு மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான வாரன் பாட்ஸ்லி 575 ரன்கள் குவித்து இருந்தார்.
இதைப் போன்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சார் காரிஃபில்ட் சோபர்ஸ் 571 ரன்களும், கிரிக்கெட் பிதாமகன் பிராட்மன் 551 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சந்திர பால் 512 ரன்களும், இந்திய வீரர் திலீப் வெங்சர்கார் 508 ரன்களும், ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டர் 503 ரன்களும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் குவித்து இருந்தார்கள். 2வது இன்னிங்சில் ஸ்மித் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஸ்மித் லார்ட்ஸ் மைதானத்தில் 600 ரன்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications