Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல விடுங்க.. புஜாராவ பாருங்க.. இங்கிலாந்தில் மிரட்டும் இந்தியன்.. WTC இறுதிப்போட்டிக்கு தயார்!

லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது முறையாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.

2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ஸ்டீவ் ஸ்மித், கம்மின்ஸ், லபுஷேன் உள்ளிட்டோர் இங்கிலாந்து தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப திட்டமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.

WTC Final: 3rd Hundred for Cheteshwar Pujara as a Captain of Sussex in County 2023

ஆனால் இந்திய அணிக்கு தேர்வான வீரர்களோ ஐபிஎல் தொடரில் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இதனால் சில வீரர்கள் காயமடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உனாத்கட், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாற்று வீரர்களை அறிவிக்க வேண்டிய நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களை இங்கிலாந்துக்கு நல்ல உடற்தகுதியுடன் அனுப்புவதே பிசிசிஐ-க்கு சவாலாக அமைந்துள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் இந்திய அணியின் சுவர் புஜாரா இங்கிலாந்தில் மரண மாஸ் காட்டி வருகிறார். ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் வாங்கப்படாத புஜாரா, கடந்த இரு ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

அந்த வகையில் நடப்பு ஆண்டில் சசக்ஸ் அணியின் கேப்டனாக புஜாரா விளையாடி வருகிறார். அவருடன் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித்தும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் வோர்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் புஜாரா தனி வீரராக போராடி சதம் விளாசி அசத்தியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த வோர்செஸ்டர்ஷையர் அணி 264 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சசக்ஸ் அணி 2ம் நாளில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. புஜாரா 134 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் விளையாடி வருகிறார்.

இந்த சதத்தின் மூலம் கவுண்டி கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகளில் மூன்றாவது சதத்தை விளாசி மிரட்டியுள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் முடிவடைந்து 10 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து மண்ணில் புஜாராவின் ஃபார்ம் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, May 5, 2023, 22:16 [IST]
Other articles published on May 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+