உலகிலேயே இதுதான் மோசம்.. இறுதி செய்த அந்த தவறு.. இந்தியாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்- காரணம் என்ன?
சவுத்தாம்டன்: இந்தியாவின் பேட்டிங் வரிசை குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சூடுபிடித்துள்ளது.
2ம் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக இருந்த நிலையில் 3ம் நாள் ஆட்டம் நியூசிலாந்தின் பக்கம் சாயந்தது.

3வது நாள்
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று தொடங்கிய 3ம் நாள் ஆட்டத்தில் தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அடுத்தடுத்து விக்கெட்
கேப்டன் விராட் கோலி 44 ரன்களுக்கும், துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 49 ரன்களுக்கு அவுட்டாகினர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்து 4 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த தமிழக வீரர் அஸ்வின் அடுத்தடுத்து பவுண்டரிகள் விரட்டிய நிலையில் 22 ரன்களுக்கு அவுட்டானார்.

ஜேமிசன் அசத்தல்
மறுமுணையில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். ஆனால் அவருக்கு சரியான ஜோடி அமையவில்லை. டெயில் எண்டர்ஸ் எனப்படும் இஷாந்த் சர்மா (4), ஜஸ்பிரித் பும்ரா (0) என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் ஜடேஜாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய கெயில் ஜேமிசன் 5 விக்கெட்களை எடுத்தார்.

நெட்டிசன்கள் விமர்சனம்
இந்நிலையில் இந்திய அணியின் டெயில் எண்டர்ஸ் எனப்படும் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ரவீந்திர ஜடேஜா பார்ட்னர்ஷிப் ஏற்படுத்துவதற்காக கடுமையாக போராடினார். ஆனால் அவருக்கு யாராலும் உதவ முடியவில்லை. இதனால் உலகிலேயே இந்திய அணியின் டெயில் எண்டர்ஸ் தான் மிகவும் மோசமாக உள்ளது எனக்கூறி சாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications