Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புஜாரா ஓய்வுக்காக ரசிகர்கள் போர்க்கொடி.. கோலி மீது படுமோசமாக விமர்சனம்..இணையத்தில் கிளம்பிய பூகம்பம்

சவுத்தாம்டன்: இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரை ரசிகர்கள் திடீரென படு மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மழையில் குறுக்கீட்டால் கடந்த போட்டிகள் பாதிக்கப்பட்டதால் இன்று ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் ஆட்டம் விளையாடப்பட்டு வருகிறது.

நம்பிக்கை

நம்பிக்கை

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலை பெற்று 249 ரன்களை குவித்தது. இதனையடுத்து அதிக ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5ம் நாள் முடிவு வரை 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் களத்தில் இருந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இன்று தொடங்கிய 6ம் நாள் ஆட்டத்தில் அனுபவ வீரர்களாக கோலி மற்றும் புஜாரா மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. குறிப்பாக இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய துருப்புச்சீட்டாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அனைத்து பொய்யானது. கெயில் ஜேமிசன் வீசிய ஓவரில் விராட் கோலி (13) மற்றும் புஜாரா(15) ஆகியோர் அடுத்தடுத்து மோசமாக எட்ஜ்ஜாகி வெளியேறினர்.

மோசமான ஷாட்

மோசமான ஷாட்

சவுத்தாம்டனில் கடந்த 5 நாட்களாக வானிலை மோசமாக இருந்த நிலையில் இன்று நல்ல வெயில் அடித்து பேட்ஸ்மேனுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் பொறுப்புடன் ஆட வேண்டிய அவர்கள் இருவரும் மிகவும் மோசமான ஷாட்களால் எட்ஜாகி கேட்ச் ஆகினர். இதனால் முக்கிய மேட்ச்-ல் இவ்வளவு அசால்டாகவா விளையாடுவது என ரசிகர்கள் இணையத்தில் படு மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

ஓய்வு

ஓய்வு

இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரராக இருந்து வரும் சட்டீஸ்வர் புஜாரா தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு பார்ட்னர்ஷிப் அமைக்கக்கூடியவர். ஆனால் கடந்த சில போட்டிகளில் அவரின் ஆட்டம் ரசிகர்களுக்கு திருப்தி அள்ளிக்கவில்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அவர் மோசமாக அவுட்டாகி உள்ளார். முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு அவுட்டான அவர், 2வது இன்னிங்ஸில் 15 ரன்களுக்கு வெளியேறியுள்ளார். இதனல் அவர் கண்டிப்பாக ஓய்வு பெற வேண்டும் என கோரி வருகின்றனர்.

Story first published: Wednesday, June 23, 2021, 19:15 [IST]
Other articles published on Jun 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+