Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC பைனலுக்கு முன்னேறும் பாகிஸ்தான் கனவுக்கு செம அடி.. தோல்வி மட்டுமல்லாமல் புள்ளிகளை குறைத்த ஐசிசி

ராவல்பிண்டி : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெரும் வாய்ப்பு மிகவும் கடினமாக மாறியது. இந்த சூழலில் ஐசிசி பாகிஸ்தானின் புள்ளிகளை மேலும் குறைத்திருக்கும் சம்பவம் அந்நாட்டு ரசிகர்களை பெறும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சாளர் வைத்து களமிறங்கியது. எனினும் பார்ட் டைம் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினாலும் தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்கள் வீசியதால் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

pak vs ban Shakib al hasan cricket mohammed rizwan

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் வாங்கிய புள்ளிகளில் இருந்து 6 புள்ளிகள் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று வீரர்களின் ஊதியத்திலிருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.அதேசமயம் வங்கதேசமும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறி அவர்களுக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக வங்கதேச வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான அணி தற்போது கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இன்னும் 8 டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை சொந்த மண்ணிலும் தென்னாப்பிரிக்காவை அவர்களது மண்ணிலும் எதிர்கொள்ள உள்ளது.

இது அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இதில் ஒரு டிரா அடைந்தால் கூட பைனலுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் கடினமாக மாறிவிடும். ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால் மற்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் வேண்டுமென்றே முகமது ரிஸ்வானை நோக்கி பந்தை எறிந்த சம்பவத்திற்கு நடுவர் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறார். போட்டி ஊதயத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொலை வழக்கில் சிக்கி இருப்பதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆயத்தம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 27, 2024, 8:13 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+