Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"லன்ச்" வரை நோ மேட்ச்.. மீண்டும் ஒரு அறிவிப்பு - இம்முறை முந்திக் கொண்ட நியூசிலாந்து

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் டெஸ்ட் போட்டி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று (ஜூன்.18) எதிர்கொள்கிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு ஆட்டம் தொடங்குவதாய் இருந்தது. ஆனால், அங்கு தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

 இடியுடன் மழை

இடியுடன் மழை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கும் ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை மழை பெய்யும் என்று இங்கிலாந்து வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கொடுத்த வாக்கை மறக்காமல் காப்பாற்றிய மேகங்கள், மழையைப் பொழிய, இன்றைய முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டாஸ் கூட போடமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.

 மழை 2.3mm

மழை 2.3mm

சவுத்தாம்ப்டனில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. 12 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 2mm, அளவு இருக்கும். 1 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 2.3mm, அளவு இருக்கும். 2 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

பிற்பகல் 3 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும். மாலை 4 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 19 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும். மாலை 5 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 19 km/h இருக்கும். மழை 3.4mm, அளவு இருக்கும். மாலை 6 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 18 km/h இருக்கும். மழை 3.5mm, அளவு இருக்கும். ஆக மொத்தம் இன்று முதல் நாள் முழுவதும் பெய்யவே அதிகமாக வாய்ப்பு உள்ளது.

 பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

இந்த சூழலில், தான் தொடர் சாரல் மழை காரணமாக, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடத்தப்பட மாட்டாது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி, பலத்த மழை பெய்யவில்லை. ஆனால், தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது. இது இப்படியே தொடரும் பட்சத்தில், இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படலாம்.

 நியூசி., வாரியம்

நியூசி., வாரியம்

இந்த நிலையில், இன்று முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரையிலான ஆட்டம் முழுவதும் நடத்தப்பட மாட்டாது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த முறை இந்திய கிரிக்கெட் வாரியம் அப்டேட் கொடுக்க, இம்முறை நியூசிலாந்து வாரியம் அப்டேட் கொடுத்திருக்கிறது.

Story first published: Friday, June 18, 2021, 19:59 [IST]
Other articles published on Jun 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+