Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: உச்சி தலை அதிர .. வெளுக்கும் வெயில்.. இறுதிப் போட்டி "சுடச் சுட" ரெடி - வீடியோ

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குவது ஏறக்குறைய உறுதியாகிறது. சும்மா வெயில் நச்சுன்னு அடிச்சிக்கிட்டு இருக்கு.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்போட்டி நேற்று (ஜூன்.18) தொடங்கவிருந்தது.

ஆனால், நேற்று முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கவில்லை. காலையில் கூட போடமுடியாத அளவுக்கு மழை பெய்து கொண்டிருந்தது.

ஆட்டம் ரத்து

ஆட்டம் ரத்து

சவுத்தாம்ப்டனில் போட்டி நடைபெறும் நாட்களில் மழை பெய்யும் என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் நாள் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. முதலில் உணவு இடைவேளை வரை ஆட்டம் கைவிடப்பட்டது. எனினும், மதியத்திற்கு பிறகும் தொடர்ந்து மழை பெய்ததால், முதல் ஆட்டம் முற்றிலும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, வீரர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

வானிலை மையம்

வானிலை மையம்

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டமாவது நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி, இன்று (ஜூன்.19) இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதி, நிச்சயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில்,சவுத்தாம்ப்டனில் இன்று காலை நேரத்தில் வெயில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெளுக்கும் வெயில்

இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. விளையாட்டுச் செய்தி பிரிவு ஆசிரியர் விக்ராந்த் குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று மழை அடிச்சு ஊற்றிய சவுத்தாம்ப்டன் மைதானமா இது? என்று அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் வெயில் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேட்ச் உறுதி

மேட்ச் உறுதி

வானமும் தெளிவாக உள்ளது. இப்போதைக்கு மழை வருவதற்கான அறிகுறியே அங்கு தெரியவில்லை. ஸோ, இந்தளவுக்கு மழை பெய்வதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டாஸ் தன்னை சுழற்றிக் கொள்வது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. சவுத்தாம்ப்டனின் நகரும் மேகங்கள், இறுதிப் போட்டியையும் அப்படியே நகர்த்தி கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மதியத்துக்கு பிறகு

மதியத்துக்கு பிறகு

இருந்தாலும், கிளைமேக்சில் வைக்கப்படும் ட்விஸ்ட் போல, அதேசமயம், மதியத்திற்கு பிறகு மழை பெய்ய 30 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலையில் இன்னும் கொஞ்சம் ஹெவியாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். ஸோ, காலையில் மேட்ச் நடந்தாலும், மதியத்திற்கு பிறகு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம். எப்படி இருந்தாலும், இன்று சில ஓவர்களையாவது ரசிகர்கள் பார்ப்பது உறுதி என்றே தெரிகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முற்றிலும் தடைப்பட்டதால் இன்று அரை மணி நேரம் முன்பாகவே போட்டி தொடங்கவுள்ளது. இன்று மட்டுமல்ல, மீதமுள்ள நான்கு நாட்களுக்கும் போட்டி அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 19, 2021, 16:37 [IST]
Other articles published on Jun 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+