WTC Final: விடாது கொட்டும் மழை.. முதல் நாள் முதல் செஷன் கேன்சல் - தொடக்கமே சிக்கல்
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் செஷன் விளையாடப்படமாட்டாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இன்று (ஜூன்.18) எதிர்கொள்கிறது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு ஆட்டம் தொடங்குவதாய் இருந்தது. ஆனால், அங்கு பெய்து வரும் தொடர் மழை போட்டியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இடியுடன் மழை
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில், இன்று காலை 10 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 12 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 2 மணியளவில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 5 மணியளவில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெளிவாக குறிப்பிட்டது. குறிப்பாக, 11 மணிக்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை 2.3mm
12 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 2mm, அளவு இருக்கும். 1 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 2.3mm, அளவு இருக்கும். 2 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும்.

ரசிகர்கள் ஏமாற்றம்
பிற்பகல் 3 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 20 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும். மாலை 4 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 19 km/h இருக்கும். மழை 0.5mm, அளவு இருக்கும். மாலை 5 மணியளவில், 13 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 19 km/h இருக்கும். மழை 3.4mm, அளவு இருக்கும். மாலை 6 மணியளவில், 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் 18 km/h இருக்கும். மழை 3.5mm, அளவு இருக்கும். ஆக மொத்தம் இன்று முதல் நாள் முழுவதும் பெய்யவே அதிகமாக வாய்ப்பு உள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு
இந்த சூழலில், தான் தொடர் சாரல் மழை காரணமாக, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடத்தப்பட மாட்டாது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி, பலத்த மழை பெய்யவில்லை. ஆனால், தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது. இது இப்படியே தொடரும் பட்சத்தில், இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications