Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final IND vs NZ: பரபரக்கும் ஃபைனல்.. மேட்ச் எத்தனை மணிக்கு? எந்த சேனலில் பார்க்கலாம்?

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தியில் நீங்கள் காணலாம்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய அணி இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.

ரிசர்வ் நாள்

ரிசர்வ் நாள்

இந்நிலையில், இப்போட்டி குறித்த முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள 'The Ageas Bowl' ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை இப்போட்டி நடைபெறுகிறது. ரிசர்வ் நாள் - ஜூன் 23.

6 மணி நேரம்

6 மணி நேரம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. 10 AM GMT நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதுவே, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் போட்டி நடைபெறும் என்பதால், இரவு 10 மணியளவில் ஆட்டம் முடிவடைய வாய்ப்புள்ளது.

லைவ் மேட்ச்

லைவ் மேட்ச்

இப்போட்டியை எந்தெந்த நாடுகளில் எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம் என்ற லிஸ்ட் இங்கே,

இந்தியா: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்

நியூசிலாந்து: ஸ்கை ஸ்போர்ட்ஸ் NZ

இங்கிலாந்து: ஸ்கை ஸ்போர்ட்ஸ்

தென்னாப்பிரிக்கா: சூப்பர்ஸ்போர்ட் மற்றும் எஸ்ஏபிசி

ஆஸ்திரேலியா: ஒளிபரப்பு இல்லை

இந்திய அணி

இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம் இங்கே. ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்க்ய ரஹானே(துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல்.

ஆறாவது நாள்

ஆறாவது நாள்

இந்த இறுதிப் போட்டிக்கான விதிகளையும் ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஒரு நாள் ஆட்டம் பாதித்தால், அடுத்த நாள் விரைவாக தொடங்க அனுமதிக்கப்படும். அதேசமயம், மாலையில் ஒரு மணி நேரம் வரை கூடுதலாக விளையாடுவது அனுமதிக்கப்படும். மாற்று ஆப்ஷனாக ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரிசர்வ் நாள் பயன்படுத்துவது தொடர்பாக ஐந்தாவது நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதை மேட்ச் ரெஃபரி இரு நடுவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் 5 நாட்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஐசிசி தெளிவுப்படுத்தியுள்ளது.

Story first published: Monday, June 14, 2021, 16:50 [IST]
Other articles published on Jun 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+