For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விரல்கள் முழுவதும் தையல்.. இந்தியாவின் வெற்றிக்காக விடாப்படி போராட்டம்.. இஷந்துக்கு கிடைத்த பரிசு!

சவுத்தாம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.

 நேற்று குற்றச்சாட்டு.. இன்று ஒற்றுமையா?.. விராட் கோலியின் நிலையற்ற கருத்து.. குழம்பும் ரசிகர்கள்! நேற்று குற்றச்சாட்டு.. இன்று ஒற்றுமையா?.. விராட் கோலியின் நிலையற்ற கருத்து.. குழம்பும் ரசிகர்கள்!

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்ததாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் சீனியர் வீரர் இஷாந்த் சர்மா காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட்

நியூசிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப்பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் 2வது இன்னிங்ஸில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

விரல்களில் காயம்

விரல்களில் காயம்

கடைசி நாள் ஆட்டத்தின்போது நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லருக்கு வீசிய பந்தை தானே தடுக்க முயன்றார் இஷாந்த் சர்மா. அப்போது அவருக்கு கைவிரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டி முடிந்தவுடனேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாந்தின் விரல்களில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அவரின் நடு விரலிலும், மோதிர விரலிலும் 10 தையல்களுக்கு மேல் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இங்கிலாந்து அணியை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே இங்கிலாந்து பெரிய அனுபவம் வைத்துள்ள இஷாந்த் சர்மா, இந்த தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்விகள் உலா வருகின்றனர்.

குழப்பத்திற்கு விடை

குழப்பத்திற்கு விடை

இது குறித்து பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இஷாந்த் சர்மாவிற்கு விரல்களில் போடப்பட்டுள்ள தையல்களின் காயம் 10 நாட்களில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க 6 வார காலம் இருப்பதால், அவர் அதற்குள் தயாராகிவிடுவார் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 25, 2021, 19:53 [IST]
Other articles published on Jun 25, 2021
English summary
Indian Pacer Ishant Sharma receives multiple stitches after got a hand injury in WTC Final againts newzealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X