சவுத்தாம்டனின் ரம்மியமான காட்சி... குடும்பத்துடன் ரசிக்கும் இந்திய வீரர்கள்.. வைரல் புகைப்படம்!
சவுத்தாம்டன்: இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் ஹோட்டலில் தங்கியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிகட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக மும்பையில் உள்ள ஹோட்டலில் 14 நாட்கள் குவாரண்டைனில் இருந்து வீரர்கள் இன்று இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இந்திய ஆடவர் அணியின் 24 வீரர்களும், மகளிர் அணியில் 20 வீராங்கனைகளும் தனி விமானம் இங்கிலாந்து அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் குடும்பத்தினரும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. நேரடியாக லண்டன் விமான நிலையம் சென்று இறங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சாலை வழியாக 130 கிமீ பயணித்து சவுத்தாம்டன் நகருக்கு சென்றனர்.

சவுத்தாம்டன் ஹோட்டல்
இந்நிலையில் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இந்திய வீரர்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ரோஸ் பவுல் மைதானத்திற்குள் ஹோட்டலும் உள்ளதால் அனைவரும் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனை
வீரர்களுக்கு இந்த ஹோட்டல் அறையில் 5 நாட்கள் குவாரண்டைனில் இருக்கவுள்ளனர். அதில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த 3 பரிசோதனைகளிலும் நெகட்டீவ் என முடிவு வந்தால் மட்டுமே 4வது நாளில் இருந்து வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதே ரோஸ் பவுல் மைதானத்தில் தான் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதன் பிறகு ஆக.4ம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்திய மகளிர் அணி
இதே போல இந்திய மகளிர் அணி சவுத்தாம்டனில் இருந்து பிரிஸ்டல் நகருக்கு பயணிக்கவுள்ளனர். இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அங்கு தான் நடைபெறவுள்ளது. கடந்த 7 வருடங்களில் இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனை முடித்தவுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.


Click it and Unblock the Notifications