Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவை நேர்காணல் செய்த சஞ்சனா.. திருமண புகைப்படங்கள் குறித்து சுவாரஸ்ய பதில்கள்.. உலகமகா நடிப்புடா

சவுத்தாம்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக ஜஸ்பிரித் பும்ரா தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அவரது மனைவி ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ள நிலையில் அதற்கான பிரோமஷன் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிரமோஷன்கள்

பிரமோஷன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், ஸ்பான்சர்களும் அதற்கு ஏகபோக அளவில் குவிந்துள்ளனர். அதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வீரர்களையும் வைத்து நேர்காணல் நிகழ்ச்சிகள், விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு நடந்த நேர்காணல் சற்று வித்தியாசமாக அவருடைய மனைவி சஞ்சனா கணேசனுடன் நேர்காணல் நடைபெற்றுள்ளது.

தம்பதியின் நேர்க்காணல்

தம்பதியின் நேர்க்காணல்

பும்ரா - சஞ்சனா ஆகியோருக்கு கடந்த மே மாதம், கோவாவில் திருமணம் நடைபெற்றது. சஞ்சனா கணேஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பும்ரா நேர்காணலுக்கு வந்துள்ளார். அப்போது தொகுப்பாளினியாக தனது மனைவி நின்று இருப்பதை பார்த்த அவர் ஆச்சரியமடைந்தார். அவர், இதற்கு முன்னர் உன்னை எங்கோ பார்த்திருக்கிறேனே என கிண்டலாக தெரிவித்தார்.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

பும்ராவிடம் அவரின் இன்ஸ்டா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து கேள்விகளை சஞ்சனா கணேசன் கேட்டார். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பும்ரா - சஞ்சனாவின் திருமண புகைப்படங்களும் அதில் இருந்தது. அது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பும்ரா, வெட்கப்பட்டு கொண்டே, முதலில் இந்த பெண்ணை இதற்கு முன்னர் எங்கோ பார்த்திருக்கிறேனே, யார் இதில் உள்ளது எனக்கிண்டல் அடித்தார். பின்னர் "எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் இது. இதுகுறித்த நினைவுகள் உனக்கும் இருக்கும் என நினைக்கிறேன்" எனக்கூறினார். இருவரின் நேர்க்காணல் வீடியோவை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பும்ராவின் தேவை

பும்ராவின் தேவை

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இங்கிலாந்து பிட்ச்சானது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையேயான போர்க்களமாக உள்ளது. குறிப்பாக ட்ரெண்ட் போல்ட்- பும்ரா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, June 17, 2021, 17:52 [IST]
Other articles published on Jun 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+