Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'வெந்த புண்ணில் வேல்-ஐ பாய்ச்சும் வாகன்’... கொந்தளித்த இந்திய ரசிகர்கள்.. இணையத்தில் வெடித்த போர்!

இங்கிலாந்து: சவுத்தாம்டனில் மழை வந்த கடுப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்களை மைக்கேல் வாகன் மேலும் கடுப்பாக்கியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கவிருந்தது.

ஆனால் விடாது பெய்து வரும் மழையின் காரணமாக போட்டி இன்னும் தொடங்காமல் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

போட்டி நடைபெறவுள்ள சவுத்தாம்டன் நகரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் 3.30 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய இந்தியா - நியூசிலாந்து போட்டி உணவு இடைவெளி வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வாகன் ட்வீட்

வாகன் ட்வீட்

இந்நிலையில் மழைகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் கூறியுள்ள கருத்து 'வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை' போன்று இந்திய ரசிகர்களை சூடாக்கியுள்ளது. சவுத்தாம்டன் மழை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாகன், மழை குறுக்கீடு செய்ததால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து இந்தியா தப்பித்துள்ளது என நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர் என அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்று அசுரபலத்தில் இந்தியா உள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக வாகன் கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹை கிளாஸ்

ஹை கிளாஸ்

முன்னதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து பேசியிருந்த வாகன்,

நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியுள்ளது. அந்த டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி தற்போது ஹை கிளாஸ் அணியாக வலம் வருகிறது.

பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து ஏரியாக்களிலும் நியூசிலாந்து வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

நியூஸி,க்கு தான் வெற்றி

நியூஸி,க்கு தான் வெற்றி

இங்கிலாந்து மைதானங்களில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள். அதையே நாம் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பார்த்தோம். எனவே இந்திய அணியை, நியூசிலாந்து சுலபமாக வென்றுவிடும் எனக்கூறியிருந்தார். போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே இந்தியா குறித்து வாகன் கிண்டல் அடித்து பேசுவது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, June 18, 2021, 17:21 [IST]
Other articles published on Jun 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+