Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீடியோ- என்ன இப்படி இறங்கிட்டாங்க.. மைதானத்தில் திடீரென ஷமி செய்த சேட்டை.. களத்தில் இறங்கிய ஐசிசி!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முகமது ஷமி செய்த வேடிக்கை விஷயம் இணையத்தை கலக்கி வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதிகப்படியான ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற 5வது நாள் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தது என்றே கூறலாம். இதற்கு காரணம் முகமது ஷமி தான்.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 101 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த நிலையில் நேற்று 5ம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. தொடக்கத்தில் கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் விக்கெட்டை பிரிக்க இந்தியா பெரும் சிரமப்பட்டது. நேரம் ஆக ஆக, ஸ்கோர் எகிறிவிடுமோ என்ற அச்சத்தையும் கொடுத்தது. ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டா முகமது ஷமி.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

நீண்ட நேரமாக டொக்கு ஆட்டம் ஆடி அச்சுறுத்தல் கொடுத்து வந்த ராஸ் டெய்லருக்கு அனைத்து பந்துகளையும் உடலுக்கு அருகாமையில் வீசினார். திட்டம் போட்டது போன்றே ராஸ் டெய்லர் டைவ் அடிக்க சுப்மன் கில் டைவ் கேட்ச் பிடித்து அசத்தினார். அதன் பின்னர் அவர், வாட்லிங்கின் பௌல்ட், கிராண்ட் ஹோம்மின் எல்.பி.டபள்யூ என 4 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுணையை ஏற்படுத்தினார்.

வைரலான முகமது ஷமி

வைரலான முகமது ஷமி

இந்நிலையில் பந்துவீச்சை தவிர்த்து அவர் செய்த மற்றொரு விஷயமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்றைய ஆட்டத்தின் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த முகமது ஷமி, திடீரென பெரிய டவள் ஒன்றை எடுத்து தனது உடலில் கட்டிக்கொண்டார். அந்த செஷண் முடியும் வரை அவர் அதனை கழற்றவே இல்லை. ஏன், டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்லும் போது கூட அந்த டவளை கட்டிக்கொண்டே தான் சென்றார்.

என்ன காரணம்

என்ன காரணம்

முகமது ஷமி ஏன் இதனை செய்தார் என்ற உண்மை காரணம் தெரியவரவில்லை. ஆனால் ட்விட்டரில் ரசிகர்கள் சிலர், சவுத்தாம்டனில் நல்ல குளிர் அடிப்பதால் அதனை கட்டிக்கொண்டார் என்றும், மழைப்பெய்தால் ஜெர்ஸி நினைந்துவிடக்கூடாது என அணிந்திருப்பதாக கூறி வருகின்றனர். இந்த விஷயத்தை ஐசிசி-ம் விட்டுவைக்க வில்லை. ஷமி டவள் அணிந்திருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐசிசி அமைப்பு, சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, 'இனி என்ன வேண்டுமானலும் செய்யலாம்' எனக்குறிப்பிட்டுள்ளது.

Story first published: Wednesday, June 23, 2021, 14:59 [IST]
Other articles published on Jun 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+