
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து மைதானம் வழக்கமாக வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான ஒன்று. நியூசிலாந்து மைதானங்களிலும் இதே போன்ற பிட்ச்-கள் தான் இருக்கும் என்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

முதல் வாய்ப்பு
இந்நிலையில் முன்னாள் ஸ்பின் பவுலர் மாண்டி பனிசர் இங்கிலாந்து பிட்ச் குறித்து கணித்துள்ளார். அதில் அவர், சவுத்தாம்டன் அருகில் தற்போது மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. இதே வானிலை இந்தியா - நியூசிலாந்து போட்டியின் போது தொடர்ந்தால் இரு அணி பந்துவீச்சாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதை எதிர்பார்க்கலாம். ஈரமான சூழலில் இந்திய பேட்ஸ்மேன்களை விட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

இந்திய அணிக்கு சாதகம்
ஆனால் மழை எதுவும் பொழியாமல், போட்டி அன்று நல்ல வெயில் அடித்தால், இங்கிலாந்து களம் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். இதுபோன்ற சூழலில் இந்திய அணி அஸ்வின், ஜடேஜா என 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும். எனவே வானிலையை பொறுத்தே எந்த அணிக்கு சாதகமான பிட்ச் இருக்கும் என்பதை கூற முடியும்.

எது பலமானது
இரு அணிகளின் பலத்தை வைத்து பார்த்தால் இந்திய அணி சற்று பலமானது எனக்கூறலாம். ஏனென்றால் இந்தியா பல கடினமாக போட்டிகளிலும், சூழல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அவர்களால் எந்த நிலையில் இருந்து வேண்டுமானாலும் மீண்டு வர முடியும். ஆனால் நியூசிலாந்து அணி பெரிய அளவில் கடினமான போட்டிகளில் மீண்டு வந்ததில்லை என மாண்டி பனிசர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications