Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துபாயில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்... ஐசிசி மீது பீட்டர்சன் கடும் அதிருப்தி.. வரவேற்பு தரும் ரசிகர்கள்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து கெவின் பீட்டர்சன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி குறித்து முதலில் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மழை அதை கெடுத்துவிட்டது என்று கூறலாம்.

போட்டியின் அனைத்து நாட்களிலும் மழை பெய்து வருவதால் வெற்றியாளரை தீர்மானிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மழையின் குறுக்கீடு

மழையின் குறுக்கீடு

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்க வேண்டிய இந்த போட்டியை மழை குறுக்கிட்டு முற்றிலும் கெடுத்துவிட்டது. இதனால் 2ம் நாளில் தான் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து 2ம் நாளில் பேட்டிங் செய்த இந்திய அணி மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஆனால் 4ம் நாளான நேற்றைய ஆட்டமும் மழையின் குறுக்கீட்டால் கைவிடப்பட்டது. இதனால் போட்டி சமனில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

கடும் விமர்சனங்கள்

கடும் விமர்சனங்கள்

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போன்ற முக்கிய அட்டங்களுக்கு ஐசிசி சரியான இடங்களை தேர்ந்தெடுப்பது இல்லை என்றும் கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரும் இப்படிதான் மழையினால் கடும் பாதிப்புக்கு உள்ளானது என விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ரிசர்வ் டே ஆட்டத்தின் தேதியையோ இடத்தையோ மாற்ற வேண்டும் எனக்கோரிக்கை எழுந்து வருகிறது.

கெவின் பீட்டர்சன் கருத்து

கெவின் பீட்டர்சன் கருத்து

இந்நிலையில் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் அதில் இணைந்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், இந்த கருத்தை சொல்வதற்கு எனக்கு வேதனையாக இருக்கிறது. மிக முக்கியமான இந்த போட்டியை இங்கிலாந்தில் நடத்தியிருக்கக் கூடாது. என்னைப்பொருத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி போன்ற முக்கியமான போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும்.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

ஐக்கிய அரபு அமீரகமானது அனைத்து அணிகளுக்கும் பொதுவான இடம், நல்ல வானிலை, பயிற்சி வசதிகள், விமான மையம் என அனைத்தும் அங்கு உள்ளது. குறிப்பாக ஐசிசி அமைப்பின் தலைமையகம் அங்கு தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, June 22, 2021, 19:08 [IST]
Other articles published on Jun 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+