Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

VIDEO: ‘யோவ்.. இந்தாய்யா..! கோலி செஞ்ச சேட்டை.. ரோஹித் கொடுத்த ‘அல்டிமேட்’ ரியாக்‌ஷன்.. ‘செம’ வைரல்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது கோலி செய்த சிறுபுள்ளை தனமான செயலுக்கு ரோகித் கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போடி சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற 3 நாட்கள் போட்டியில் நேற்று நடைபெற்ற 5ம் நாள் ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்துள்ளது.

கோலியின் அட்வைஸ்

கோலியின் அட்வைஸ்

முதலில் விளையாடிய இந்திய அணி 217 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி இந்தியாவை விட 32 ரன்கள் முன்னிலையுடன் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேற்றைய போட்டியில் முதலில் வலுவான நிலையில் இருந்த நியூசிலாந்து பின்னர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. இந்திய அணியின் இந்த திடீர் எழுச்சிக்கு கோலி கொடுத்த 2 நிமிட அட்வைஸ் காரணமாக பார்க்கப்பட்டது.

திடீர் எழுச்சி

திடீர் எழுச்சி

ட்ரிங்ஸ் பிரேக் நேரத்தின் போது சீனியர் வீரர் முகமது ஷமியிடம் கோலி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஷமி வீசிய முதல் பந்திலேயே ராஸ் டெய்லரின் விக்கெட் கிடைத்தது ஆச்சரியம் அளித்தது. அதன் பிறகு தான் நியூசிலாந்து அணியில் சீட்டுக்கட்டை போன்று விக்கெட்கள் சரிந்தது. எனவே கோலி ட்ரிங்ஸ் பிரேக்கில் கொடுத்த அட்வைஸின் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

வைரல் புதிய வீடியோ

இந்நிலையில் கோலி குறித்த புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் தற்போது மழைகாலம் என்பதால் நல்ல குளிர் நிலவுகிறது. இதனால் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கோலி குளிர் தாங்க முடியாமல் ரோகித் சர்மாவின் முகத்திற்கு நேராக வாயைப்பிழந்து கொட்டாவி விட்டார். மேலும் இரு கைகளையும் தேய்த்துக்கொண்டு சுற்றினார். அவரின் சிறுபுள்ளை தனமான இந்த செயலை பார்த்த ரோகித் சர்மா 'என்னயா இப்படி பன்னிட்டு சுத்துற' என்பதை போல கைகாட்டி ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தி வைரலாகி வருகிறது.

நல்ல அடித்தளம்

நல்ல அடித்தளம்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். இரு இன்னிங்ஸுகளிலும் 34 மற்றும் 30 ரன்களை அடித்து அணிக்கு ஓரளவிற்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஹென்றி நிக்கோலஸ் அடித்த பந்தை டைவ் அடித்து பிடித்து ஆச்சரியம் அளித்தார்.

Story first published: Wednesday, June 23, 2021, 14:08 [IST]
Other articles published on Jun 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+