Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸில் இருக்கும் பெரிய வெற்றி வாய்ப்பு.. நியூசிலாந்து அணிக்கே சாதகம்.. காரணத்தை விவரிக்கும் பாண்ட்!

மும்பை: நியூசிலாந்து அணியின் முக்கிய பலம் குறித்து முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து பிட்ச்-ல் பேட்டிங்கை விட பவுலிங் தான் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்தில் நல்ல வேகமும், நல்ல ஸ்விங்கும் இருக்கும் என்பதால் இந்த போட்டி அவர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணி மூன்றே மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க திட்டமிட்டு வருகிறது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு

வெற்றி வாய்ப்பு யாருக்கு

எனினும் இந்த போட்டி நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இந்தியாவுக்கு முன்னதாகவே இங்கிலாந்துக்கு சென்று அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி வெற்றியும் பெற்றுள்ளது.

டாஸ் தான் முக்கியம்

டாஸ் தான் முக்கியம்

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் தான் முக்கிய பங்காக இருக்க போகிறது என முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நியூசிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துவிட்டால் இந்திய அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டிவிடும். தொடக்கம் முதலே பந்து ஸ்விங் செய்யத் தொடங்கினால், இந்திய அணியில் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்துவிடும். இதனால், நியூசிலாந்து சுலபமாக வென்றுவிடும்.

நியூசிலாந்தின் அனுபவம்

நியூசிலாந்தின் அனுபவம்

என்னைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணிதான் வெற்றிபெறும் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த அனுபவம் அவர்களுக்கு நிச்சயம் பெரியளவில் கைகொடுக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 16, 2021, 21:11 [IST]
Other articles published on Jun 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+