For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசிலாந்தின் ஸ்மார்ட்னஸ்.. இந்தியாவின் தைரியம்.. இரு அணிகளின் ப்ளேயிங் 11.. பிட்ச் தன்மை எப்படி?

சவுத்தாம்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வித்தியாசமான ப்ளேயிங் 11 உடன் களமிறங்கியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழைக்குறுகிட்டு டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் 2வது நாள் ஆட்டமான இன்று டாஸ் போடப்பட்டு தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2ம் நாள் பிட்ச்

2ம் நாள் பிட்ச்

சவுத்தாம்டன் பிட்ச்சானது வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக உதவக்கூடிய ஒன்றாகும். இதில் நேற்று முழுவதும் மழை பெய்துள்ளதால் பிட்ச்-ல் ஈரப்பதம் ஏற்பட்டு பந்தில் நல்ல ஸ்விங் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் பிட்ச்-ல் ஓரளவிற்கு புற்களும் உள்ளது. இதனால் போட்டி வேகப்பந்துவீச்சாளார்களுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.

பவுலிங் திட்டம்

பவுலிங் திட்டம்

ஆனால் இந்திய அணியோ பிட்ச் குறித்து யோசிக்காமல் தனது ப்ளேயிங் 11-ல் எந்தவித மாற்றமும் இன்றி களமிறங்கியுள்ளது. அதன்படி முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா என 3 வேகப்பந்துவீச்சாளர்களும், அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்களையும் பயன்படுத்தியுள்ளது.

ரிஸ்க் எடுத்த பிசிசிஐ

ரிஸ்க் எடுத்த பிசிசிஐ

இதில் அஸ்வின் ஓரளவிற்கு நியூசிலாந்தின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர். ஆனால் ஜடேஜாவுக்கு தற்போது பிட்ச் எந்த அளவிற்கு கைக்கொடுக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரை ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா - கில் ஜோடி, மிடில் ஆர்டரில் புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ரஹானே, அஸ்வின், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா

நியூசிலாந்து திட்டம்

நியூசிலாந்து திட்டம்

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இங்கிலாந்து களத்தில் நியூசிலாந்து வீரர்கள் நல்ல அனுபவம் உள்ளதால பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக உலக தரம் வாய்ந்த பவுலர்களான ட்ரெண்ட் போல்ட், டிம் சவுத்தி, கெயில் ஜேமிசன் ஆகியோர் அணியில் உள்ளனர்.

நியூசிலாந்து ப்ளேயிங் 11

நியூசிலாந்து ப்ளேயிங் 11

டாம் லாதம், டேவன் கான்வே, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோலஸ், வாட்லிங், டி கிராண்ட் ஹோம், கெயில் ஜேமிசன், வாக்னர், சவுத்தி, ட்ரெண்ட் போல்ட்

Story first published: Saturday, June 19, 2021, 16:38 [IST]
Other articles published on Jun 19, 2021
English summary
Team India's Bold Decision to playing with 2 spinners Combination in WTC Final against Newzealand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+