Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி அசத்தல் கம்பேக்.. சூடுபிடித்த ஆட்டம்.. 3ம் நாள் ஆட்டம் முடிவடைந்தது - முழு ஸ்கோர் விவரம்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

2ம் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக இருந்த நிலையில் 3ம் நாள் ஆட்டம் நியூசிலாந்தின் பக்கம் சாயந்தது.

3வது நாள்

3வது நாள்

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று தொடங்கிய 3ம் நாள் ஆட்டத்தில் தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

கேப்டன் விராட் கோலி 44 ரன்களுக்கும், துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 49 ரன்களுக்கு அவுட்டாகினர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்து 4 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த அஸ்வின் அடுத்தடுத்து பவுண்டரிகள் விரட்டிய நிலையில் 22 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுணையில் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். ஆனால் அவருக்கு சரியான ஜோடி அமையவில்லை. இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய கெயில் ஜேமிசன் 5 விக்கெட்களை எடுத்தார்.

நியூஸி, முதல் இன்னிங்ஸ்

நியூஸி, முதல் இன்னிங்ஸ்

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு சிறப்பான அடித்தளம் கிடைத்தது. தொடக்க வீரர்கள் டேவன் கான்வே - டாம் லாதம் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த டாம் லாதம் 30 ரன்களுக்கு வெளியேறினார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச் எனக்கூறப்பட்ட நிலையில் இந்த ஜோடியை ரவிச்சந்திரன் அஸ்வின் தான் பிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேவன் கான்வாய் கேன் வில்லியம்சன் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர். ஆனால் நீண்ட நேரம் இந்த பார்ட்னர்ஷிப் நீடிக்க வில்லை. இஷாந்த் சர்மா வீசிய பந்தில் தொடக்க வீரர் டேவன் கான்வே 54 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை எடுத்துள்ளது. வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Story first published: Sunday, June 20, 2021, 23:34 [IST]
Other articles published on Jun 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+