For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொனால்டோவுக்கு நடந்த அதே சம்பவம்.. கோலியின் முன் வைக்கப்பட்ட கோகோ கோலா... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

சவுத்தாம்டன்: பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலியின் செயல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று மழையினால் தடைபட்டது.

இதனால் 2வது நாளான இன்று போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது விராட் கோலியின் முன்பு கோகோ கோலா பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

ரொனால்டோ செயல்

ரொனால்டோ செயல்

ஈரோ 2020 கால்பந்துப் போட்டித் தொடர் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று லிஸ்பன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜூவன்டஸ் அணி சார்பில் ஆடும் ரொனால்டோ கலந்துக்கொண்டார். அப்போது அவர், திடீரென தன் முன்பு வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்துவிட்டு, தண்ணீரை குடிக்கும்படி அறிவுறுத்தினார்.

கோகோ கோலாவுக்கு பெரும் இடி

கோகோ கோலாவுக்கு பெரும் இடி

ரொனால்டோவின் இந்த செயல் உலக முழுவதும் மிகப்பெரும் பேசுப்பொருளானது. இதுமட்டுமல்லாமல் அவரின் இந்த செயலால் கோகோ கோலா நிறுவனத்திற்கு சுமார் ரூ.29,000 கோடி வரை ஒரே நாளில் நஷ்டம் ஏற்பட்டது. இவரை தொடர்ந்து மேலும் சில கால்பந்து வீரர்களும் கோகோ கோலா பாட்டில்களை ஒதுக்கி வைத்தனர்.

ப்ரஸ் மீட்

ப்ரஸ் மீட்

இந்நிலையில் ரொனால்டோவின் ரசிகரான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அப்படி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விராட் கோலியின் முன்பும் கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அதனை அவர் ரொனால்டோவை போலவே ஓரம் கட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதுவுமே செய்யவில்லை. எனினும் அதனை எடுத்தும் அவர் குடிக்கவில்லை.

ரசிகர்கள் ஆதங்கம்

ரசிகர்கள் ஆதங்கம்

ரொனால்டோவின் ரசிகர் எனக்கூறி கொள்ளும் இந்திய கேப்டன் விராட் கோலி, ஏன் ரொனால்டோ கூறிய ஒரு விஷயத்தை பின்பற்றவில்லை என நெட்டிசன் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். எனினும் மற்றொரு பக்கம் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் கோகோ கோல நிறுவனம் முக்கிய ஸ்பான்சராக இருந்து வருகிறது. எனவே அதனை சீண்டினால் தனக்கு விளம்பர ஒப்பந்தங்கள் கிடைக்காதோ என்ற அச்சத்தில் கோலி எதுவும் செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Saturday, June 19, 2021, 17:54 [IST]
Other articles published on Jun 19, 2021
English summary
Fans getting Disappointed after Indian Skipper Virat Kohli not removing Coca-Cola bottles in press conferencelike Cristiano Ronaldo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+