For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final: 4 ஆஸ்திரேலிய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க போகும் தென்னாப்பிரிக்கா?

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற வெறும் 69 ரன்கள் தான் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு எட்டு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் வெற்றியே பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.பவுமா அல்லது எய்டன் மார்க்கரம் ஆகியோர் கடைசிவரை நின்று பேட்டிங் செய்தால் நிச்சயம் தென்னாப்பிரிக்காவின் வெற்றி எளிதாகி விடும்.

Australia vs south africa

இதே போன்று ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு வயதாகி வருகிறது. இந்த தொடருடன் சிலர் ஓய்வு பெறுவதாக இருந்தனர்.

ஆனால் நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் ஆசஸ் தொடருக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று எண்ணியிருந்தனர். ஆனால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவினால் நிச்சயம் பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.

இதில் யார் யார் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் உஸ்மான் கவாஜா. 38 வயதாகும் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் இஸ்லாமிய வீரர் ஆவார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5930 ரன்கள் அடித்து இருக்கிறார். எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் உஸ்மான் கவஜா முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆகியும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் உஸ்மான் கவஜா ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் நாதன் லயான். 38 வயதை நெருங்கும் லயான் ஆஸ்திரேலிய அணிக்காக 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 553 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் 8 ஓவர்கள் வீசிய லயான், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவினால் லயன் ஓய்வு பெற்று விடுவார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஸ்டார்க். 35 வயதான ஸ்டார்க், இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 382 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி வந்தாலும், ஓய்வு வயதை நெருங்கி வருகிறார்.

ஒருவேளை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவினால், ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ஸ்மித். ஸ்மித் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விளங்கி வந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை தாண்டி அடித்துவிட்டார்.எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா வெளியேற வாய்ப்பு இருக்கிறது. இதனால் தென்னாபிரிக்காவின் வெற்றி பல ஆஸ்திரேலிய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Story first published: Friday, June 13, 2025, 23:51 [IST]
Other articles published on Jun 13, 2025
English summary
WTC Finals 2025- Loss For Australia vs south africa in Final Might Ends 4 cricketers carrier
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+