For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final 2025-இது அநியாயம்! டெஸ்ட் கிரிக்கெட் முக்கியம் இல்லையா?தமிழக ரசிகர்களை ஏமாற்றிய starsports

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியும் ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் தொடர் முடிவில் எந்த அணி அதிக புள்ளிகள் பெறுகிறதோ அதில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி பைனலுக்கு செல்லும்.

இந்த தொடரின் முதல் இரண்டு சைக்கிளிலும் இந்தியா தான் இறுதிப் போட்டிக்கு சென்றது. இந்த சூழலில் மூன்றாவது சைக்கிளில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் பலப் பரிட்சை நடத்துகிறது. இந்த தருணத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பெரும்பாலும் தமிழக ரசிகர்கள் கண்டுக்களிப்பார்கள்.

SA vs Aus

டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்பதால் எந்த நாடு விளையாடினாலும் அதனை பார்ப்பதற்கு என தனிப்பட்டாலும் நம் தமிழ்நாட்டில் உள்ளது. இதன் காரணமாக தான் ஆசஸ் தொடர் போன்ற வெளிநாடுகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் எல்லாம் தமிழ்நாட்டில் அதிக அளவு பார்க்கப்படும்.

இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதி வருகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தமிழ் சேனலில் ஒளிபரப்பு செய்யாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைவிட்டு இருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள உண்மையான கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இந்தியா விளையாடாததால் இந்த முடிவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எடுத்து இருக்கலாம் என தெரிகிறது.வெறும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும்தான் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.தமிழ் சேனல் வந்த பிறகு ஆங்கிலம் தெரியாத கிராமப்புற இளைஞர்களும் கிரிக்கெட்டை பார்க்க தொடங்கினர். ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பை கைவிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

டிஎன்பிஎல் தொடர் இரவு நேரத்தில் நடைபெறுகிறது. அந்த தொடரை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை கைவிட்டு இருக்கிறார்கள். உலகம் முழுவதும் டி20 தொடர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் டெஸ்ட் போட்டியின் உலக கோப்பையை கூட தமிழ்நாட்டில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பல்வேறு கேபிள் நிறுவனங்களில் வெறும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் மட்டும்தான் வருகிறது. ஆங்கில ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிடையாது. இப்படி நிலை இருக்கும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒளிபரப்பாமல் செய்திருப்பது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்திருக்கிறது.

Story first published: Wednesday, June 11, 2025, 17:09 [IST]
Other articles published on Jun 11, 2025
English summary
WTC Finals 2025- SA vs Aus Tamil broadcast was not streaming in star sports made fans angry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+