Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரிந்திருக்கும் நாட்டை இந்த வெற்றி ஒன்று சேர்க்கும்..எங்க தகுதியை சந்தேகித்தவர்களுக்கு பதிலடி-பவுமா

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் பல கேலி கிண்டல்களுக்கு ஆளான தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, அனைத்து விமர்சனங்களுக்கும் தற்போது பதிலடி கொடுத்திருக்கின்றார்.

இந்த வெற்றியின் மூலம் உணர்ச்சி வசப்பட்ட பவுமா வீரர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அதன் பிறகு பரிசளிக்கும் விழாவில் பேசிய பவுமா, கடந்த இரண்டு நாட்கள் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆக இருந்தது.

Temba Bavuma

நாங்கள் ஏதோ தென்னாப்பிரிக்காவில் இருப்பது போல் மைதானம் மாறியது. இந்த தொடருக்காக நாங்கள் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு நாங்கள் இந்த போட்டிக்கு பல நம்பிக்கைகளுடன் வந்தோம். சிலர் எங்கள் தகுதி மீது சந்தேகமும் அடைந்தனர். தற்போது நாங்கள் அபாரமாக விளையாடி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது நிச்சயம் எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் ஆகும். நாட்டில் உள்ள மக்களுக்கும் நிச்சயம் இது மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த வெற்றியை உணர்வதற்கு எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்படும் என நினைக்கின்றேன். ஒரு அணியாக நாங்கள் இந்த கோப்பையை வெல்ல முயற்சி செய்தோம். நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்றோம். வெற்றியின் கதவு அருகே வந்து பல இதய நொறுங்கும் நிகழ்வுகளை சந்தித்து இருக்கின்றோம்.

ஆனால் இம்முறை நம்பிக்கை எங்களிடம் தான் இருந்தது. நிச்சயமாக பல எதிர்கால கோப்பைகளுக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.ரபாடா மிகவும் அபாரமாக பந்து வீசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு Hall of fame நிகழ்ச்சியில் லண்டனில் நடைபெற்றது.

அதற்கு நாங்கள் சென்றிருந்தோம். அப்போது ரபாடா இன்னும் சில ஆண்டுகளில் இந்த கௌரவத்தை பெறுவார் என்று நான் நம்பினேன். இந்தப் போட்டிக்கு வருவதற்கு முன்பு பல சர்ச்சைகளில் அவர் சிக்கி இருந்தார்.தற்போது அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பந்து வீசி இருக்கின்றார். நம்பவே முடியாது ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். பலரும் டெஸ்ட் போட்டியில் அவருடைய இடத்தை கேள்வி கேட்டார்கள்.

ஆனால் அவரிடம் வெற்றி பெற வைக்க வேண்டிய குணாதிசயம் இருக்கின்றது. தனக்கெனவே உரிய ஆட்டத்தை இன்று அவர் வெளிப்படுத்தினார். ரபடாவும் அவரும் இந்த வெற்றியை தோளில் சுமந்து சென்றார்கள். இறுதிப் போட்டியில் நாங்கள் தகுதி பெற்ற போது பலரும் எங்களை நோக்கி கேள்வி கேட்டார்கள். இறுதிப் போட்டிக்கான பயணம் எங்களுக்கு எளிதாக இருந்தது என்பது போல் பலரும் பேசினார்கள்.

ஆனால் இந்த வெற்றி அவர்களுடைய சந்தேகங்களை எல்லாம் அடித்து நொறுக்கி இருக்கும் என்று நம்புகிறேன். இந்த வெற்றி பிரிந்து இருக்கும் எங்களுடைய நாட்டை ஒன்றாக இணைக்கும் என நம்புகிறேன். ஒன்றிணைந்தால் சாதிக்கலாம் இந்த வெற்றியை நாங்கள் ஒரே தேசமாக கொண்டாடுவோம் என்று ரபடா தெரிவித்தார்.

Story first published: Saturday, June 14, 2025, 18:45 [IST]
Other articles published on Jun 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+