Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final 2025: SA vs AUS டாஸ் யாருக்கு சாதகம்.. பவுமா எடுத்த முடிவை கண்டு கொள்ளாத கம்மின்ஸ்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆடுகளம் பேட்டிங்கிற்கும், பந்துவீச்சுக்கும் சரிசமமான வகையில் எடுபடும் என்று தெரிகிறது. எனினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் முதலில் பந்து வீச போகின்றோம். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம். ஆடுகளம் நன்றாக இருக்கின்றது. எங்கள் அணியில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய நான் விரும்பவில்லை.

WTC Finals 2025

இதனால் சிறந்த காம்பினேஷனை நாங்கள் ஏற்கனவே தேர்வு செய்து விட்டோம். எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். லார்ட்ஸ் மைதானத்திற்கும் எங்களுக்கும் ஒரு நல்ல தொடர்பு இருக்கின்றது. இதனால் தேசிய கீதம் பாடும்போது நிச்சயம் எங்களுக்கு உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.

இது மிகப்பெரிய இறுதி போட்டி. கண்டிப்பாக இரு அணிகளும் சிறப்பாக விளையாடும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், முதலில் பேட்டிங் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி தான். வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

இந்த போட்டிக்காக நாங்கள் சிறப்பான முறையில் பயிற்சி செய்தோம். இந்த போட்டிக்காக பத்து நாள் எனக்கு இடைவெளி கிடைத்திருந்தது. இதில் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எங்களுக்கு எந்தவித கூடுதல் நெருக்கடியும் இல்லை. நாங்கள் ஏற்கனவே இங்கு விளையாடி இருக்கின்றோம், வென்று இருக்கின்றோம். எனவே இந்த வாரம் முழுவதும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவோம் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: 1 ஏய்டன் மார்க்ரம், 2 ரியான் ரிக்கில்டன், 3 வியான் முல்டர், 4 டெம்பா பவுமா (கேப்டன்), 5 டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 6 டேவிட் பெடிங்காம், 7 கைல் வெர்ரேய்ன், 8 மார்கோ ஜான்சன், 9 கேசவ் மகாராஜ், 10 ககிசோ ரபாடா,

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: 1, உஸ்மான் கவாஜா, 2, மார்னஸ் லாபஸ்சேன், 3 கேமரூன் கிரீன், 4 ஸ்டீவன் ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6, பியூ வெப்ஸ்டர், 7 அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்) 8, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 9 மிட்செல் ஸ்டார்க், 10 நாதன் லியோன், 11 ஜோஷ் ஹேசல்வுட்

Story first published: Wednesday, June 11, 2025, 15:08 [IST]
Other articles published on Jun 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+