Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சவுத்தாம்டனில் அஜித் ரசிகர்கள் செய்த சேட்டை.. குழப்பமடைந்த அயல்நாட்டு மக்கள்.. வைரலாகும் புகைப்படம்

சவுத்தாம்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அஜித் ரசிகர்கள் செய்த சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெற்று வருகிறது.

முதல் 2 நாள் ஆட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களை எடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பான தொடக்கம் பெற்று விளையாடி வருகிறது. தொடக்க வீரர்கள் டாம் லாதம் - டேவன் கான்வே ஜோடி முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்தனர்.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் இந்த போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மைதானத்தில் இருந்த அஜித் ரசிகர்கள் சிலர் நீண்ட நாட்களாக வெளி வராமல் இருக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு பதாகை ஒன்றை கையில் வைத்திருந்தார். இதனை பார்த்த நியூசிலாந்து ரசிகர்கள் எதுவும் புரியாமல் குழம்பினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான கடந்த மே 1ம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் அவதியுற்று வரும் கொரோனா காலக்கட்டத்தில் அஜித்தின் பிறந்தநாளும் கொண்டாடப்பட வேண்டாம், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.

ஏற்கனவே வெளியான அப்டேட்

ஏற்கனவே வெளியான அப்டேட்

சமீபத்தில் நடிகர் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் வலிமை குறித்து அப்டேட் வெளியிட்டார். அதில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின்னர் அவை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தார். எனினும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கேட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பதாகை தூக்கியுள்ளனர். இதனால் வலிமை குறித்த பேச்சுக்கள் தற்போது உலகளவில் பேசப்பட்டு வருகிறது.

Story first published: Sunday, June 20, 2021, 23:27 [IST]
Other articles published on Jun 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+