Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Points Table - இங்கிலாந்துக்கு இலங்கை வைத்த ஆப்பு.. இனி இந்தியாவின் பைனல் வாய்ப்பு ஈஸி

மும்பை : இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான தோல்வியை அடுத்து இனி இங்கிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 68.52 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 62.50 வெற்றி சதவீதத்துடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 50 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் வங்கதேசம் அணி 45.83 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

WTC Points table

இலங்கை அணி தற்போது 42.8 வது வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் இனி இறுதிப் போட்டிக்கு செல்ல எந்த அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு வெற்றி பெற்றால் பைனலுக்கு செல்ல முடியும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இனி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு முடிந்துவிட்டது.

இனி எஞ்சிய போட்டிகளில் அனைத்துமே அவர்கள் வென்றால் கூட இனி பைனலுக்கு செல்ல முடியாது என்ற நிலை வந்து விட்டது. இந்த சூழலில் ஆஸ்திரேலியா அணி பைனல் செல்ல வேண்டும் என்றால் எஞ்சியுள்ள ஏழு போட்டிகளில் அவர்கள் நான்கு போட்டிகளில் வெல்ல வேண்டும். இதில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட்டும் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் அந்நிய மண்ணிலும் நடக்கின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரை எஞ்சியுள்ள 10 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றார். பைனலுக்கு செல்ல முடியும். அதில் வங்கதேசம் எதிரான இரண்டு டெஸ்ட், நியூசிலாந்து எதிரான மூன்று டெஸ்ட் ஐந்து போட்டிகளில் இந்தியா வென்றாலே பைனலுக்கு தகுதி பெற முடியும். இந்த சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முழுமையாக தோற்றாலும் கூட பைனல் செல்லும் வாய்ப்பில் பாதிப்பு ஏற்படாது.

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை எஞ்சியுள்ள ஆறு டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் ஐந்து போட்டிகளில் வெல்ல வேண்டும். இதில் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட்கள் அவர்களுக்கு எஞ்சி இருக்கிறது. நியூசிலாந்தை பொறுத்தவரை எஞ்சி உள்ள எட்டு டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் ஆறு ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.

இதில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் இந்தியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் பாக்கி உள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை அவர்களிடம் எஞ்சி இருக்கும். ஆறு டெஸ்ட் போட்டிகளில் 5 வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் எஞ்சி இருக்கிறது.

வங்கதேச அணியும் எஞ்சியுள்ள ஆறு டெஸ்டில் ஐந்து போட்டிகளில் வெல்ல வேண்டும். இதில் இந்தியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட், வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு டெஸ்ட் பாக்கியுள்ளது.

Story first published: Tuesday, September 10, 2024, 1:29 [IST]
Other articles published on Sep 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+