Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் வெற்றி.. புள்ளி பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்?

மும்பை: டி20 உலக கோப்பை தற்போது நெருங்கி வருவதால் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் வாங்கிய அடியை மறந்து விட்டார்கள். ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் தற்போது டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடி வருகிறது.

இதில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது அசஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது.

WTC Points table

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கிறது. அதனை தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலிய அணி 100% வெற்றி புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்கள். இதே போன்று நியூசிலாந்து அணி 77.78 ஆகிய புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

அண்மையில் இந்தியாவிற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி 75 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 50 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

இந்திய அணி 48.15 சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 27.08 வெற்றி சதவீதத்துடன் எட்டாவது இடத்திலும், வங்கதேசம் 16.67 வெற்றி சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 4.17 வெற்றி சதவீதத்துடன் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவது மற்ற அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. இந்த புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்திய அணி, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெளிநாடுகளில் விளையாடுகிறது. அதன் பின் தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது.

Story first published: Monday, December 22, 2025, 12:31 [IST]
Other articles published on Dec 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+