Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC புள்ளி பட்டியல்.. இந்தியாவை முந்திய பாகிஸ்தான்.. தென்னாப்பிரிக்கா தோல்வியால் நிகழ்ந்த சரிவு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி, பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இதன் மூலம் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது எந்த இடத்திற்கு சரிந்து இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இரண்டு ஆண்டுகள் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியை இறுதி போட்டிக்கு முன்னேறும்.

WTC Points Table 2025

இந்த சைக்கிளில் முதல் இரண்டு இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்ற நிலையில், மூன்றாவது சைக்கிள் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றது. இதில் தென்னாபிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் கில் தலைமையிலான இந்திய அணி புதிய சைக்கிளில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

அதன் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் வென்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. தற்போது பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்தியா நான்காவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. அதன்படி முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணி 100% வெற்றியுடன் உள்ளது.

இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று 100 புள்ளி வெற்றி சதவீதத்துடன் உள்ளது. இலங்கை அணி 66.6 வெற்றி சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் 61.90 வெற்றி சதவீதத்துடன் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. 43 புள்ளி வெற்றி சதவீதத்துடன் இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

16.67 வெற்றி சதவீதத்துடன் வங்கதேச அணி ஆறாவது இடத்திலும் புள்ளிக் கணக்கை தொடங்காமல் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழாவது இடத்திலும், தென்னாபிரிக்க அணி எட்டாவது இடத்திலும் உள்ளது. இதில் நியூசிலாந்தில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில் இருக்கிறது. நடப்பு உலக சாம்பியன் ஆன தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்திருப்பதால் இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவின் அடுத்த டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 14ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் தொடங்குகிறது.

Story first published: Wednesday, October 15, 2025, 16:22 [IST]
Other articles published on Oct 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+