பெர்த்: WWE மல்யுத்த போட்டியில் முக்கிய தொடரான கிரவுண் ஜுவல் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் WWE வை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் பங்கேற்று போட்டியில் பலப்பரிட்சை நடத்தினர்.
ஆஸ்திரேலியாவில் இந்த போட்டி நடைபெற்றதால், கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது இந்தத் தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வீரர் ரோமன் ரெய்ன்ஸ், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரான்சன் ரீடுடன் பல பரிட்சை நடத்தினார்.

இந்த போட்டியில் நடுவே பல ஆயுதங்களை வைத்து வீரர்கள் சண்டை போட அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது திடீரென்று ரோமன் ரெயின்ஸ், அங்கிருந்த கிரிக்கெட் பேட் ஒன்றை எடுத்தார். அதை எடுத்தவுடன் ஆஸ்திரேலியா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதன்பின் ரக்பி பந்துகளை எடுத்து பிரான்சன் ரீடையும் பால் ஹேமனையும் ரோமன் ரெயின்ஸ் தாக்கினார்.
அதனை தொடர்ந்து கிரிக்கெட் பேட்டை வைத்து பிரான்சன் ரீடை அவர் அடித்தார். அப்போது வர்ணனையில் செய்து கொண்டிருந்த வேட் பேரேட், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருப்பது போல் தற்போது ரோமன் ரெயின்ஸ் பேட்டை வைத்திருக்கிறார் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேட்டை உயர்த்தி காட்டிய ரோமன் ரெயின்ஸ், கிரிக்கெட் பந்தை அடிப்பது போல் பிரான்சன் ரீடை வயிற்றில் ஓங்கி அடித்தார். அப்போது அங்கு இருந்த ஆஸ்திரேலியா ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். ரிக்கி பாண்டிங் பேட்டிங் செய்வது போல் ரோமன் பேட்டிங் செய்கிறார் என வேட் பேரேட் பாராட்டினார்.
அப்போது இருந்த வர்ணையால் மைக்கேல் கோல், ரோமன் ரெயின்ஸ் ஒரு பேட்ஸ்மேனாக மாறிவிட்டார் என்று புகழ்ந்தார். ஒரு கட்டத்தில் இந்த போட்டி ரோமன் ரெயின்ஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் திடீரென்று பிரான்சன் ரீட் அணியைச் சேர்ந்த பிரான் பிரேக்கர் உள்ளே வந்து ரோமன் ரெயின்சை தாக்கினார்.
இதை அடுத்து ரோமன் ரெயின்ஸ், இன் குடும்பத்தைச் சேர்ந்த உசோ பிரதர்ஸ் களத்திற்கு வந்து ரோமன் ரெயின்சை காப்பாற்றினர். அப்போது தவறுதலாக ஜே உசோ, ஒரு ஸ்பியர் தாக்குதலை நடத்த அது ரோமன் ரெயின்ஸ் மீது விழுந்தது. இதனை எடுத்து ரோமன் ரெயின்ஸ், நிலை குலைந்து போனார். இதனை பயன்படுத்திக்கொண்ட பிரான்சன் ரீட் ரோமன் ரெய்ன்சை வீழ்த்தி வெற்றியைப் பெற்றார்.
இது போட்டியில் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட் ஆக அமைந்தது. இதை அடுத்து ரோமன் ரெயின்ஸ், நான் உங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே ஏன் வந்தீர்கள் என்று தனது குடும்ப உறுப்பினர்களை திட்டி விட்டு களத்தை விட்டு வெளியே சென்றார். திடீரென்று மல்யுத்த களத்தில் கிரிக்கெட் வந்ததால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். சிலர் பாகிஸ்தான் வீரரை விட ரோமன் ரெயின்ஸ் நன்றாக பேட்டிங் செய்கிறார் என்று பாராட்டினர்.