Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WWE Night of Champions 2025: மீண்டும் கோர முகத்தை காட்டிய John cena.. கிங் ஆப் தி ரிங் வென்றது யார்

ரியாத்: WWE எனப்படும் மல்யுத்த பொழுதுபோக்கு விளையாட்டின் முக்கிய தொடரான (Night of champions) நைட் ஆஃப் சாம்பியன்ஸ் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது. சவுதியில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டு தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டு தொடர்பான WWE நைட் ஆப் சாம்பியன் தொடர் நடந்தது. இந்த போட்டியை சுமார் 15,000 க்கு மேற்பட்ட ரசிகர்கள் கண்டு களித்தனர். இந்தத் தொடரின் முதல் போட்டியாக கிங் ஆப் தி ரிங் பட்டத்திற்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் நபர் wwe சாம்பியன் பட்டத்திற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

WWE Night of champions 2025 Results

சவுதி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு இடையே கோடி ரூட்ஸ் மற்றும் ரேண்டி ஆர்டன் ஆகியோர் களத்திற்குள் வந்தனர்.சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த போட்டியின் போது ரேண்டி ஆர்டனுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் அவர் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி விளையாடினார். எனினும் இறுதியில் கோடி ரூட்ஸ், கிங் ஆப் த ரிங் பட்டத்தை வென்று இருக்கிறார். இதன் மூலம் சம்மர் ஸ்லாம் தொடரில் ஜான் சீனாவுடன் அவர் மோத உள்ளார்.

இதேபோன்று WWE us சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான போட்டியில் நடப்பு சாம்பியன் ஜேக்கப் பாட்டூ (Jacob fatu) உடன் அவருடைய முன்னாள் அணியின் உறுப்பினரான சோலோ சிக்கவோ பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியில் வழக்கம் போல் wwe பொழுதுபோக்கு மசாலாக்கள் தூவப்பட்டிருந்தது.

இதில் நடுவரை ஏமாற்றி சோலோ சிக்கவோ தனது குழு உறுப்பினர்களை வைத்து ஜேக்கப் பாட்டூவை அடித்து வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதன் முறையாக கைப்பற்றினார். மற்றொரு போட்டியில் ஷமி சாயின், கேரியன் கிராஸ் என்ற வீரரை வீழ்த்தினார். மகளிர் போட்டியில் ரியா ரிப்லேவும், மகளிருக்கான குயின் ஆஃப் தி ரிங் இறுதிப் போட்டியில் ஜாக் கெர்கிலும் வெற்றி பெற்றனர்.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் wwe சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான ஆட்டத்தில் ஜான் சீனாவும் சிஎம் பங்கும் பல பரிட்சை நடத்தினர். சுமார் 26 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் பல்வேறு திருப்புமுனைகள் இருந்தது. வீரர்களும் அபாரமாக விளையாடி ஒட்டுமொத்த சவுதி ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

இந்த போட்டியின் போது திடீரென்று மணி இன் தி பேங்க் பட்டத்தை வைத்திருக்கும் செத் ராலன்ஸ் வந்தார். அந்த பட்டத்தை வைத்திருக்கும் வீரர் எங்கு எப்போது வேண்டுமானாலும் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சேத் ராலன்ஸ் அந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் ஜான் சீனா தடுத்தார். அப்போது ராலன்ஸ் கூட இருந்த வீரர்கள் ஜான் சீனாவையும் சிஎம் பங்கையும் அடித்தனர்.

இந்த தருணத்தில் இருவரும் தங்களை அடிக்க வந்த வீரர்களை மீண்டும் அடித்தார்கள். இதனால் ஜான் சீனா தன்னுடைய வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து மீண்டும் ஹீரோ கதாபாத்திரத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை எதிர்பார்த்த சிஎம் பங் ஜான் சீனாவிடம் கைக்குலுக்க சென்றார்.

அப்போது மீண்டும் ஜான் சீனா தன்னுடைய கோர முகத்தை காட்டி சி எம் பங்கை அடிக்க முற்பட்டார். அந்த சமயம் ராலன்ஸ், மீண்டும் பங்கை அடிக்க ஜான் சீனா இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் தன்னுடைய சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Story first published: Sunday, June 29, 2025, 12:05 [IST]
Other articles published on Jun 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+