இங்கேயும் தோனியா? WWE வீடியோ.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஹைதராபாத் : WWE வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இங்கே முக்கியமான மல்யுத்த நிகழ்ச்சியில் ஜான் சீனா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஹைதராபாத்தில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 5,000 டிக்கெட்கள் முன்பதிவில் விற்றுத் தீர்ந்து இருக்கிறது.
WWE Superstar Spectacle என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி சோனி நெட்வொர்க் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளன.

இந்த நிலையில், இந்தப் நிகழ்ச்சிக்கு முன்னதாக WWE வீரர்கள் கெவின் ஓவன்ஸ் மற்றும் சாமி ஸெய்ன் ஆகியோர் இது குறித்து விளம்பரம் செய்யும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட வீடியோ ஒன்றைத் தான் தோனி ரசிகர்கள் வைரல் ஆக்கி இருக்கிறார்கள்.
சாமி ஸெய்ன் அந்த வீடியோவில், தான் இந்தியா வந்ததில் இருந்து "எம் எஸ் தோனி, எம் எஸ் தோனி" என கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அவர் இந்தியாவில் மிகப் பெரிய பிரபலம் என்று கெவின் ஓவன்ஸ்-இடம் கூறுகிறார்.
வெறும் எட்டு வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவைத் தான் தோனி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வெறித்தனமாக பரப்பி வருகிறார்கள்.
தோனி உலகம் முழுவதும் பிரபலமானவராக இருக்கிறார் எனக் கூறி பெருமையில் திளைத்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடைபெறும் இந்த WWE நிகழ்ச்சியில் ஜான் சீனா, செத் ரோலின்ஸ் டேக் டீம் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இது தான் இந்த நிகழ்வின் முக்கிய போட்டியாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு உள்ளனர்.
செம ட்விஸ்ட்.. பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ்! பல்டியடித்த தேவேகவுடா! கர்நாடகாவில் காங்கிரசுக்கு செக்! ஆஹா


Click it and Unblock the Notifications