U-19 கேப்டனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு? பிரித்வி ஷாக்கு மீண்டும் கொடுமை.. இது சரியான முடிவு?
மும்பை : இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் துல் சீனியர் அணியில் முதல்முறையாக இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யாஷ் துல், நடப்பாண்டில் நடைபெற்ற சையது முஸ்தாக் அலி தொடரில் டெல்லி அணிக்காக 8 இன்னிங்ஸில் விளையாடி 363 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் சராசரியாக 72 ரன்கள், மூன்று அரை சதங்கள் என சையது முஸ்தாக் தொடரில் அந்த அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

வாய்ப்பு ஏன்?
யாஷ் துல்லுக்கு வயது 18 என்ற அளவில் இருந்தாலும், விராட் கோலிக்கு இதுபோன்ற தான் மிக விரைவில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் விராட் கோலி தடுமாறினாலும் பிறகு உலகம் போற்றும் வீரராக மாறினார். தற்போது அதேபோல் யாஷ் துல்லுக்கும் வாய்ப்பு வழங்க தேர்வு குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அநியாயம்
எனினும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பிரித்விஷா, சஸ்பிராஸ் கான் போன்ற வீரர்களுக்கு தேர்வு குழுவினர் இதுவரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் ஒரு சீசன் மட்டும் விளையாடிய யாஷ் துல்லுக்கு வாய்ப்பு வழங்க தேர்வுக் குழுவினர் முடிவெடுத்திருப்பது அநியாயத்தின் உச்சம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காத்திருப்பு
யாஷ் துல்லுக்கு வாய்ப்பு வழங்கினால் அதே போல் பிரித்விஷா மற்றும் சர்பிராஸ் கானுக்கு பிசிசிஐ கண்டிப்பாக இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே இந்திய அணியில் அரை டஜன் கணக்கில் தொடக்க வீரர்கள் காத்திருக்கின்றனர்.

ரசிகர்கள் விமர்சனம்
தற்போது புதியதாக ஒரு நபரை அறிமுகம் செய்தால் அது இருக்கின்ற குழப்பத்தை மேலும் அதிகப்படுத்த தான் செய்யும் என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இது போன்ற தவறான முடிவுகளை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவினர் எடுத்ததால் தான் அவர்களை பிசிசிஐ அதிரடியாக நீக்கி இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications